Last Updated:
ICC Champions Trophy : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியிலிருந்து மார்ச் 9ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து விட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியிலிருந்து மார்ச் 9ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து விட்டது.
மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 2028 ஆண்டு நடைபெறும் ஆண்கள் டி20 போட்டியை நடத்திக் கொள்ளும் உரிமையை ஐசிசி பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதி ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த போட்டியை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, துபாய் கிரிக்கெட் போர்டின் தலைவர் நயான் முபாரக் அல் நயானை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை துபாயில் நடத்துவது உறுதி செய்யப்பட்டது.
December 24, 2024 6:03 PM IST