Last Updated:
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ‘பேபி ஜான்’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. தமன் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றன.
விஜயின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் படமான ‘பேபி ஜான்’ திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் குறைவான வசூலையே பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாத சூழலில், வசூலும் குறைவாக கிடைத்திருப்பது படக் குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜவான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டில் வி.ஐ.பியாக இயக்குனர் அட்லி வலம் வருகிறார். அவர் அடுத்ததாக சல்மான் கானை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையே ‘தெறி’ படத்தை தழுவி இயக்குனர் அட்லி ‘பேபி ஜான்’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் விஜய் நடித்த போலீஸ் கேரக்டரில் இளம் நடிகர் வருண் தவான் நடித்திருந்தார். சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், ஏமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகாவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெரோப் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ‘பேபி ஜான்’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. தமன் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், படம் வெளியான முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ. 23 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும், ‘ஜவான்’ படத்தின் வெற்றி, கேமியோ ரோலில் சல்மான்கான் நடித்திருப்பது என முக்கியமான அம்சங்களுடன் ‘தெறி’ படம் மெகா ஹிட் ஆனதால், ‘பேபி ஜான்’ திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதற்கு மாற்றமாக, ரசிகர்களின் கவனத்தை பெற இந்த படம் தவறி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
December 29, 2024 6:05 PM IST