Last Updated:
முகமது ஷமி சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் அணியில் இடம் பெற்றுள்ளார். 2023 இல் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பந்து வீச மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறும். இதில் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி ஆரம்பமாகிறது. அதன் பின்னர் ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதன் 3 மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும். இதற்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இதில் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் அணியில் இடம் பெற்றுள்ளார். 2023 இல் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்தார்.
கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது. இருப்பினும் அவர் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பந்து வீசமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை கவனத்தில் கொண்டு ஷமிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது .
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஷமி விளையாட வேண்டும் என்பதால் அவரை பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இடம்பெறச் செய்துள்ளது.
January 12, 2025 3:31 PM IST