ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் காலையில் எழுந்திருப்பது கூட கடினம் என்ற அளவுக்கு தற்போது காலம் மாறிவிட்டது. அந்த வகையில் தினமும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் பல்வேறு புதுப்புது அம்சங்களுடன் வெளிவந்த வண்ணம் உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. இன்னும் சிலர் இந்த ஆண்டு முடிவதற்குள்ளேயே தங்கள் ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆர்வமாக உள்ளனர். இந்திய சந்தையில் 2024ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

விளம்பரம்

Realme GT 7 Pro

Realme நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான Realme GT 7 Pro-ஐ வெளியிட உள்ளது, இது புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போனாகும். இதில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 6,000+ mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். DC டிம்மிங் கொண்ட சாம்சங் குவாட் மைக்ரோ-வளைந்த திரையை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும். IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை ரீடர் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், Realme GT 7 Pro ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

விளம்பரம்

iQOO 13

கடந்த ஆண்டு ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் ஃபிளாக்ஷிப் SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் iQOO 12 ஒன்றாகும், மேலும் இந்த சாதனையுடன் இந்த பிராண்ட் மீண்டும் பட்டியலில் இருக்க தயாராக உள்ளது. iQOO 13 ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 2025க்குள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோன் 2K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் 16GB RAM மற்றும் 1TB சேமிப்பகத்துடன் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OriginOS இயங்குதளத்துடன் வருகிறது.ஃபோனில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் பெரிய அளவிலான பேட்டரி உள்ளது, இது 120W சார்ஜை சப்போர்ட் செய்கிறது. சீனாவில் iQOO 13 இன் விலை
ரூ. 47,000-லிருந்து தொடங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க : ஜியோவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிரந்தரமாக தடுக்க வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க…

Oppo Find X8 Pro

Oppo இன் ஃபிளாக்ஷிப் ஃபைண்ட் எக்ஸ் போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய Oppo Find X8 மற்றும் Oppo Find X8 Pro விரைவில் வெளியாகும் என நிறுவனம் உறுதி செய்துள்ளது. Hasselblad கேமரா அமைப்பு உங்கள் கண்களைக் கவரும். ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் இந்தியாவில் என்ன விலையில் வருகிறது, மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இது ஒரு வலுவான போட்டியாளராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதைப் பொறுத்திருந்து பாப்போம்.

விளம்பரம்

Vivo X200 சீரிஸ்

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மற்றொரு பெரிய வெளியீடு Vivo X200 சீரிஸாக இருக்கப் போகிறது, இது புதிய அளவிலான Zeiss Optics ஷூட்டர்களையும், ஒரு பிளாட் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கிறது. Vivo இன் சாதனம் இந்தியாவின் முதல் MediaTek Dimensity 9400 இயங்கும் போனாக இருக்கலாம், மேலும் வரவிருக்கும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Redmi A4 பட்ஜெட் 5G போன்

Xiaomi இந்தியாவில் ரூ.10,000க்கு கீழ் தனது முதல் 5G போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய Snapdragon 4s Gen 2 சிப்செட் இந்த போனில் உள்ளது. இதன் மூலம் 10,000 ரூபாய்க்கு கீழ் தரமான 5G போனாக இது இருக்கும். புதிய 5G சிப்செட் 90Hz ரெப்ரெஷ் ரேட்சப்போர்ட்டை வழங்குகிறது, இது உங்களுக்கு முழு HD+ அம்சத்தையும் வழங்கும். இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் UFS 3.1 சேமிப்பகம் இருப்பதால் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

விளம்பரம்

.



Source link