நீண்ட கால அளவு vs குறைவான கால அளவு:
25 வருட கால அளவுடன் 70 லட்சம் ரூபாய் கடனை 9.5% வட்டி விகிதத்திற்கு எடுக்கும் பொழுது அதற்கான EMI தொகை தோராயமாக 61,159 ரூபாய் மற்றும் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி தோராயமாக 1,13,47,630 ரூபாயாக இருக்கும். உங்களுடைய EMI தொகையை நீங்கள் சிறிதளவு அதிகரிக்கும் பொழுது 4 வருடங்களுக்கு முன்னதாகவே கடனை திருப்பி செலுத்தி 22 லட்சத்தை உங்களால் சேமிக்க முடியும்.
ஒருவர் ஏன் குறைவான கால அளவை தேர்வு செய்ய வேண்டும்?:
*இதனால் கிடைக்கக்கூடிய பணத்தை பிற முதலீடுகளில் முன்கூட்டியே பயன்படுத்தலாம்.
*லோனை விரைவாக முடிப்பது நமக்கு இருக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கும்.
*குறைவான கால அளவுகளால் செலுத்தக்கூடிய மொத்த வட்டி தொகை குறையும்.
70 லட்ச ரூபாய் கடனை 25 வருடங்களில் செலுத்தும் போது அதற்கான EMI தொகை எவ்வளவு?:
70 லட்சம் கடனை 9.50 சதவீத வட்டி விகிதத்தில் 25 வருடத்திற்கு செலுத்தும் பொழுது தோராயமான EMI தொகை என்பது 61,159 ரூபாய் ஆகும்.
25 வருடங்களில் 70 லட்ச ரூபாய் கடனுக்கான மொத்த வட்டி எவ்வளவு?:
25 வருடங்களில் 70 லட்சம் ரூபாய் கடனுக்கான மொத்த வட்டி 1,13,47,630 ரூபாய்.
25 வருடங்களில் 70 லட்சம் ரூபாய் கடனுக்கு நீங்கள் செலுத்திய மொத்த தொகை எவ்வளவு?:
நீங்கள் இந்த கடனுக்கு மொத்தமாக 1,83,47,630 ரூபாய் செலுத்த வேண்டும்.
எவ்வளவு கூடுதல் EMI வேண்டும்?:
கூடுதல் தொகை என்பது 3304 ரூபாய். எனவே உங்களுடைய மொத்த இஎம்ஐ தொகை 64,466 ரூபாய்.
70 லட்ச ரூபாய் கடனுக்கு 21 வருடங்களில் நீங்கள் எவ்வளவு வட்டி தொகையை செலுத்தி இருப்பீர்கள்?
70 லட்சம் ரூபாய் கடனுக்கான மொத்த வட்டி தொகை 21 வருடங்களில் 90,51,926 ரூபாய்.
70 லட்ச ரூபாய் கடனுக்கு 21 வருடங்களில் நீங்கள் செலுத்திய மொத்த தொகை எவ்வளவு?:
தோராயமாக நீங்கள் செலுத்திய மொத்த தொகை 1,60,51,926 ரூபாய்.
எவ்வளவு பணத்தை நீங்கள் சேமித்து இருப்பீர்கள்?: EMI தொகையில் அதிக பணத்தை செலுத்தியதால் நீங்கள் தோராயமாக 22,95,704 ரூபாயை சேமித்திருப்பீர்கள்.
எவ்வளவு காலத்தை சேமித்து இருப்பீர்கள்?: 4 வருட காலத்தை இதன் மூலமாக நீங்கள் சேமிப்பீர்கள்.
January 02, 2025 7:37 PM IST
இந்த ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணீங்கன்னா 70 லட்ச ரூபாய் வீட்டு கடனுக்கு 22 லட்சம் ரூபாயை சேமிக்கலாம்!