அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2: தி ரூல்’. படம் வெளியான முதல் நாளே பாக்ஸ் ஆபிசில் புயலைக் கிளப்பியது. இந்திய வரலாற்றில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளே பாக்ஸ் ஆபிசில் பிரம்மாண்ட ஓபனிங் பெற்ற படம் என்ற பெருமையை பிரம்மாண்ட ஓப்பனிங் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றிருந்தது.
ஆனால் தற்போது RRR படத்தின் அந்த சாதனையை ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் உலகளவில் ரூ. 280 கோடி வசூல் வேட்டை நடத்தியதன் மூலம் முறியடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 360 கோடி வசூலித்துள்ள இந்தப் படம் முன்னணி இடத்தில் இருக்கும் படங்களின் ஒட்டுமொத்த வசூலை ஒரே வாரத்தில் அள்ளிக்குவிக்கும் வேகத்தில் உள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2: தி ரூல் படைத்துள்ள சாதனைகள்:
-
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, புஷ்பா 2 இந்திய சினிமாவில் இதுவரை முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த 10 படங்களின் வெற்றியை முறியடித்துள்ளது.
-
இந்திய சினிமா வரலாற்றில் உலகளவில் முதல் நாளே ரூ. 223 கோடி வசூல் செய்து மிகப்பெரிய ஓப்பனிங்கை கொண்ட படம் என்ற பெயரை தக்கவைத்திருந்த RRR படத்தின் சாதனையை புஷ்பா 2 முறியடித்துள்ளது.
-
புஷ்பா 2: தி ரூல் இந்தியளவில் ரூ 175 கோடி வசூலித்ததன் மூலம், RRR படத்தின் ரூ.156 கோடி வசூலை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட படம் என்ற இடத்தை தற்போது பிடித்துள்ளது.
-
முதல் நாளிலேயே ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது புஷ்பா 2. அதுமட்டுமில்லாமல், முதல் நாளில் இருவேறு மொழிகளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து புதிய மைல்கல்லையும் உருவாகியுள்ளது.
-
புஷ்பா 2: இந்தி மொழியில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை புஷ்பா 2: தி ரூல் முறியடித்துள்ளது, இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாற்றை படைத்துள்ளது. உலகநாடுகளில் வெளியாகி அறிமுகப்படத்திகரான சாதனை புடைத்திருந்த கல்கி 2898 AD படத்தின் சாதனையையும் புஷ்பா 2 முறியடித்துள்ளது.
புஷ்பா 2: தி ரூல் படம் தவறவிட்ட சாதனைகள்:
-
வட அமெரிக்காவில், புஷ்பா 2, முதல் நாளில் (பிரீமியர்கள் உட்பட) $4.47 மில்லியன் வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. இந்திய ரூபாயில் ரூ. 37.85 கோடிகள். இருப்பினும், இது பாகுபலி-2 படத்தின் $4.6 மில்லியன் (தொடக்க வசூல்) குறைவாக இருந்தது.
-
வெளிநாட்டு சந்தையில், புஷ்பா 2: தி ரூல் $8.2 மில்லியன் (சுமார் ரூ. 68 கோடி) சம்பாதித்தது, பாகுபலி 2 இன் $10.25 மில்லியன் (ரூ. 85.18 கோடி) சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.
-
தமிழ்நாட்டில், புஷ்பா 2 அதன் தொடக்க நாளில் ரூ. 7.7 கோடியை வசூலை பதிவு செய்தது, ஆனால் பாகுபலி 2 (ரூ. 17 கோடி) மற்றும் கேஜிஎஃப் -2 படத்தின் வசூலை ஒப்பிடுகையில் பின்தங்கிதான் உள்ளது.
-
கர்நாடகாவில், படம் முதல் நாளில் ரூ. 17.25 கோடி வசூலித்தது, ஆனால் பாகுபலியின் ரூ. 17.45 கோடி சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. புக்மை ஷோவில், புஷ்பா 2 முன்பதிவுகளில் 3 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது, ஆனால் பாகுபலி-2 3.3 மில்லியன் முன் விற்பனை சாதனையுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிதான் உள்ளது.
.
- First Published :