Last Updated:

Game Changer Songs Budget: ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் பான் இந்தியா படமான கேம் சேஞ்சரின் பாடல்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் 75 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.

News18

இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் ரூ.75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அது எந்த திரைப்படம், படத்தின் பட்ஜெட் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சமீப காலமாக மெகா பட்ஜெட் படங்களின் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அந்த படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் அதிக பணத்தை செலவிடுகின்றனர். ஆனால் இது பலமுறை தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். படம் படுதோல்வி அடைந்தது. இதுபோன்ற படங்கள் தோல்வியடையும் போது, கதையில் கவனம் செலுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு ​​விமர்சகர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் ஒரு மெகா பட்ஜெட் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு மட்டும் சுமார் ரூ.75 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read: Sachein Movie: ரீ ரிலீஸாகும் நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம்..? ரசிகர்கள் உற்சாகம்..!

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படம் தான் அது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி ரூபாய். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்காக மட்டும் தயாரிப்பாளர்கள் 75 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ பாடல்களுக்காக ஆடம்பரமான மற்றும் பெரிய செட்கள் நிறுவப்பட்டன. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன. ஜனவரி 10, 2025 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது வரை படத்தின் 4 பாடல்கள் வெளியாகியுள்ளன. டிரெய்லர் மற்றும் 5வது பாடல் இன்னும் வரவில்லை.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ஜரகண்டி’ பாடல் 70 அடி உயர மலை கிராமத்தில் படமாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு 13 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த பாடலை 8 நாட்களில் படமாக்கியுள்ளனர். இதற்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். அதேபோன்று. ‘ரா மச்சா மச்சா’ பாடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ‘ரா மச்சா மச்சா’ பாடல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.



Source link