மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தும் யூசர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் விண்டோஸ் பிரவுசர் பெரும்பாலான கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கூகுள் குரோம், மொஜில்லா ஃபயர்பாக்ஸ் வருகைக்கு பிறகு அதன் பயன்பாடு குறைந்தது. இருப்பினும் பெரும்பாலான யூசர்கள் கூகுள் குரோமை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அவ்வப்போது எழும் பாதுகாப்பு சிக்கல்கள் யூசர்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன.

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரில் மற்றொரு ஆபத்தான தொழில்நுட்பச் சிக்கல் வெளிப்பட்டது. இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) ஆனது இந்த சிக்கலைக் கண்டறிந்துள்ளது. எனவே யூசர்கள் தங்கள் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரில் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த சிக்கல்களை பயன்படுத்தி, ஹேக்கர்கள் யூசர்களின் டிவைஸ்களில் ஊடுருவி, யூசர்களுக்கு தெரியாமல் முக்கியமான தகவல்களை அணுக முடியும் என்றும் கூறியுள்ளது.

விளம்பரம்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பாதுகாப்பு சிக்கல்:

அக்டோபர் 7, 2024 தேதியிட்ட CERT-இன் புல்லட்டின் படி, மைக்ரோசாஃப்ட் எட்ஜில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. மோஜோவில் மோசமான டேட்டா சரிபார்ப்பு இல்லாதது, V8 ஜாவாஸ்கிரிப்ட்டில் சரியாக இம்ப்ளிமென்டேஷன் செய்யாதது ஆகியவை இதில் அடங்கும். இந்த சிக்கல்களை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் யூசர்கள் இந்த அபாயங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தங்கள் பிரவுசர்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று CERT-IN பரிந்துரைத்துள்ளது. எனவே மைக்ரோசாப்ட் பரிந்துரைத்த சமீபத்திய செக்யூரிட்டி லிங்க்குகள் மற்றும் அப்டேட்களை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்

யூசர்களின் முக்கியமான தகவல்களை பாதுகாக்க மைக்ரோசாப்ட், தொடர்ந்து பாதுகாப்பு அப்டேட்களை வெளியிடுகிறது. இருப்பினும், சில யூசர்கள் காலாவதியான பிரவுசர் வெர்சன்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்க: உங்க மொபைலில் நெட் தீர்ந்துவிட்டதா? – இலவசமாக டேட்டாவை பெற இந்த எண்ணிற்கு டயல் பண்ணுங்க!

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பாதுகாப்பு சிக்கல்: யார் பாதிக்கப்படுகிறார்கள்?

129.0.2792.79க்கு முந்தைய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெர்ஷன் உங்களிடம் இருந்தால், நீங்கள் உடனடியாக சமீபத்திய அப்டேட் வெர்ஷனை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சைபர் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.

விளம்பரம்

Copilot AI இன்டெகிரஷன் வருகையின் காரணமாக இந்த ஆண்டு எட்ஜ் மிகவும் பிரபலமானது, ஆனால் இது ஹேக்கர்களுக்கு பெரிதும் உதவுகிறது, ஏனெனில் யூசர்களின் டேட்டாவை எளிதாக அணுக முடியும். இந்தப் பெரிய சிக்கல்களில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்வது மிகவும் முக்கியம்.

இதையும் படிக்க:
OPPO India தீபாவளி சேல்ஸ்… ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

விளம்பரம்

மைக்ரோசாஃப்ட் எட்ஜை புதுப்பிக்க, இந்த வழிகளைப் பின்பற்றவும்:

1. முதலில் மைக்ரோசாஃப்ட் எட்ஜை திறக்கவும்.

2. இப்போது பிரவுசரின் மேல் ரைட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

3. இப்போது ஹெல்ப் மற்றும் பீட்பேக்கை தேர்ந்தெடுக்கவும்.

4. அபௌட் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-ஐ கிளிக் செய்யவும்.

5. கிடைக்கக்கூடிய சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்யவும்.

6. பிரவுசரை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

.



Source link