தற்போது பாப்புலர் ஆக இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது சமூவ வலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஒருவரரின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த நடிகையாக இது? என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தற்போது பார்க்கலாம்.
பிரிகிடா
யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் பிரிகிடா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதை தொடர்ந்து பிரிகிடாவுக்கு திரைப்பட வாய்ப்புகளும் வர தொடங்கின. அவர் தற்போது படங்களில் நடித்து வருகிறது.
Also Read:
சீரியசான ஜாலியோ ஜிம்கானா… பாடலாசிரியர் பெயர் விவகாரத்தில் நடந்தது என்ன?
சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்நிலையில், சிறுவயதில் அவர் சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
.