Last Updated:

Vidaamuyarchi | இந்தப் படம் வழக்கமான மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக இருக்காது. ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குக்கு வந்து படத்தை பாருங்கள். உங்களை என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையே ‘விடாமுயற்சி’.

News18

“இது போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். அவரிடம் பாராட்டு பெறுவதைத் தாண்டி எனக்கு வேறென்ன சிறந்த வெகுமதி இருக்க போகிறது. இந்தப் படம் வழக்கமான மாஸ் ஆக்ஷன் படமாக இருக்காது” என ‘விடாமுயற்சி’ படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டப்பிங், ரீ- ரெக்கார்டிங், சென்சார் உள்ளிட்ட பல விஷயங்கள் நிறைவடையாத நிலையில், படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் மகிழ்திருமேனி அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இந்தப் படத்தின் இயக்குநர் என்ற முறையில் ஒரு விஷயத்தை பார்வையாளர்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதாவது இந்தப் படம் வழக்கமான மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக இருக்காது. ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குக்கு வந்து படத்தை பாருங்கள். உங்களை என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையே ‘விடாமுயற்சி’.

ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்ளும் சாதாரண மனிதர் அவரால் முடிந்த அளவுக்கு போராடுகிறார். இதைத்தான் படமாக்க அஜித் விரும்பினார். அவருக்காக நானும் அதைத்தான் படமாக்கியிருக்கிறேன். என்னைப் போன்ற ஒரு ஆக்ஷன் பட இயக்குநரை அழைத்து இதை படமாக்க வேண்டும் என அஜித் ஏன் சொன்னார் என நான் ஆச்சரியப்பட்டது உண்டு. அவரே கூட ஒருமுறை என்னிடம், ‘மகிழ் உங்கள் கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியேறி ரிஸ்க் எடுக்க வேண்டிய நேரமிது’ என்றார்.

அதை நான் சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். ஏனென்றால் கடந்த வாரம் டப்பிங்கின்போது படத்தை பார்த்த அஜித் என்னிடம், ‘இது போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். அவரிடம் பாராட்டு பெறுவதைத் தாண்டி எனக்கு வேறென்ன சிறந்த வெகுமதி இருக்க போகிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



Source link