2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டமைக்கப்பட்ட தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த கட்டமைப்பிற்கு வெளியே முன்வைத்தால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

வரவு செலவுத் திட்டம் தாமதமானதால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்ல வழி வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source link