Last Updated:

வாட்ஸ்அப் ஆனது தற்போது “மெசேஜ் டிராஃப்ட்ஸ்” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் நீங்கள் ஒரு செய்தியை எழுத ஆரம்பித்து அதை நடுவில் விட்டுவிட்டால், அது வரைவில் சேமிக்கப்படும்.

News18

பிரபல மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் நீங்கள் முழுமையடையாத செய்திகளை சேமிக்க முடியும். அதாவது நாம் ஒரு செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, இடையில் வேறு சில வேலைகள் வந்து, அதன் மேல் நம் கவனம் திரும்பினால், செய்தி முழுமையடையாமலும், அனுப்பாமலும் அப்படியே இருக்கும்.

இந்த சிக்கலை தீர்க்க வாட்ஸ்அப் ஆனது தற்போது “மெசேஜ் டிராஃப்ட்ஸ்” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் நீங்கள் ஒரு செய்தியை எழுத ஆரம்பித்து அதை நடுவில் விட்டுவிட்டால், அது வரைவில் சேமிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் அந்த முழுமையடையாத செய்தியை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த அம்சமானது முழுமையடையாத செய்திகளை மறந்துவிடாமல் காப்பாற்றும். மேலும் இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வேலை செய்கிறது.

Also Read: உங்கள் மொபைல் எப்போதும் புத்தம் புதுசா இருக்கணுமா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க…

வாட்ஸ்அப்பில் மெசேஜை பாதியில் டைப் செய்துவிட்டு, அதை சில நேரங்களில் குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப மறந்துவிடுவோம். வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே வந்துவிட்டு திரும்ப சென்று பார்க்கும்போது பாதியில் டைப் செய்திருந்த மெசேஜ் காணாமல் போயிருக்கும். இதனால் அனுப்பப்பட வேண்டிய முக்கியமான செய்தி மறந்ததோடு, அதனை மீண்டும் டைப் செய்து அனுப்புவதால் நேரமும் வீணாகும். எனவே இந்த புதிய மெசேஜ் டிராஃப்ட்ஸ் அம்சத்தின் மூலம், அத்தகைய முழுமையற்ற செய்திகளை எளிதாகக் கண்டுபிடித்து அவற்றை முடிக்க முடியும்.

இந்த அப்டேட் மூலம், முடிக்கப்படாத செய்திகள் தானாகவே “டிராஃப்ட்” கிற லேபிளுடன், சாட்- டில் பட்டியலின் மேலே தோன்றும். இதன் மூலம் எந்த செய்திகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது, எனவே யூசர்கள் தாங்கள் முழுமையாக எழுதாத செய்திகளை விரைவாக முடிக்க முடியும் மற்றும் முழுமையற்ற செய்திகளை தேட வேண்டிய நேரத்தையும் குறைக்கும்.

இதையும் படிக்க: ஜியோவில் 50 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.1,111 விலையில் ஏர்ஃபைபர் திட்டம் அறிமுகம்…!

வாட்ஸ்அப் ஆனது யூசர்களுக்கு தொடர்ந்து புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில், அவர்கள் மெசேஜ் டிராஃப்ட்ஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, யூசர்கள் மெசேஜ்களை டைப் செய்வதை எளிதாக்கும். வாட்ஸ்அப் ஆனது யூசர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக இதுபோன்ற புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது என்பதை இதுபோன்ற அப்டேட்கள் காட்டுகின்றன.

இதையும் படிக்க: ரெட்மி A4 5G ஆனது ஏர்டெல் 5G நெட்வொர்க்கை ஆதரிக்காது…!! ஏன் தெரியுமா…?

யூசர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த அம்சம் இருப்பதாக வாட்ஸ்அப் கூறுகிறது. இந்த அம்சம் தற்போது உலகம் முழுவதும் கிடைக்கிறது. எனவே, யூசர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்வதன் மூலம் இந்த அம்சத்தைப் பெற முடியும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



Source link