பொதுவாக வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வருமான டாக்குமென்ட்கள் வழங்குவது அவசியம். ஆனால், அனைவராலும் இதனை தருவதற்கு இயலாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மாட்டித் தவிக்கும் நபர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவேளை நீங்கள் ஹோம் லோன் வாங்க முடிவு செய்திருந்த நிலையில், உங்களிடம் வருமான வரி ரிட்டன் அல்லது சேலரி ஸ்லிப் போன்ற முக்கியமான வருமான டாக்குமென்ட்கள் இல்லாவிட்டாலும் உங்களால் அருகில் உள்ள வங்கியில் இருந்து எளிமையாக ஒரு கடனை வாங்க முடியும்.

விளம்பரம்

Also Read: 
Gold Rate | தங்கம் விலை ரூ.7000-க்கும் குறைவாக சரசரவென சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?

முக்கியமான ஒரு முன்னேற்றமாக இந்தியாவில் உள்ள முன்னணி அரசு வங்கிகள் எந்தவொரு வருமான ஆவணங்களும் இல்லாமல், ஹோம் லோன்களை வழங்குவது பற்றி யோசித்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவருடைய வருமானத்தை மதிப்பிடுவதற்கு புதிய முறைகள் கையாளப்படும். உதாரணமாக சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்துபவருடைய வருமானம் QR கோடு மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது அவருடைய வருமானமாக கருதப்படும் அல்லது சராசரி பில்லிங் அடிப்படையில் வருமானம் மதிப்பீடு செய்யப்படும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2024இன் கீழ் 3 கோடி வீடுகள் கட்டித் தருவது சம்பந்தமாக அரசு எடுத்துள்ள முடிவின் சமயத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் குடிசைவாழ் மக்களை இடம்பெயர்த்துவதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் சொந்த வீட்டில் வாழலாம்.

பொதுவாக கடன்களை வாங்குவதற்கு தேவையான வருமான சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் 1.5 முதல் 2 சதவீத அதிக வட்டியை வசூல் செய்வார்கள். ஆனால் தற்போது அரசு வங்கிகள் வருமான டாக்குமென்ட்கள் இல்லாமலேயே லோன் கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர். மக்களின் வேலை செய்யும் இடத்திற்கே சென்று அவர்களுடைய வருமானத்தை மதிப்பீடு செய்வதே இதில் இருக்கக்கூடிய ஒரு புதிய யோசனை.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஜிம்கள், நீச்சல் குளத்துடன் மும்பையில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள வீடு; உரிமையாளர் யார் தெரியுமா?

சமீபத்தில் இந்திய வங்கிகள் அசோசியேஷனில் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பில் வருமான டாக்குமென்ட்கள் இல்லாமல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன்களை வாங்குபவர்களுக்கு பாதி கேரன்டியை அரசு வழங்க வேண்டும் என்று பல வங்கிகள் பரிந்துரை செய்துள்ளன. வருமான டாக்குமென்ட்கள் இல்லாமல் வங்கிகள் ஹோம் லோன்களை அப்ரூவ் செய்துவிட்டால், பல சிறிய அளவிலான தொழில் செய்து வருபவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.

விளம்பரம்

.



Source link