இந்தியாவில் தற்போது விரைவான டெலிவரி சேவைகள் வழங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டு கஸ்டமர்களை கவர்ந்து வருகின்றனர். குறைவான நேரத்தில் டெலிவரி என்ற அற்புதமான யுக்தியை பயன்படுத்தி நிறுவனங்கள் தொடர்ந்து மக்களை திருப்திப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் தற்போது அமேசான் நிறுவனம் இணைய உள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக போட்டி நிலவி வரும் டெலிவரி சேவையில் தற்போது அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் இணைய உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் இதற்கான 15 நிமிட டெலிவரி சேவைக்கான டிரையல் முறையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே இந்தியாவில் Blinkit, Zepto மற்றும் Swiggy Instamart கஸ்டமர்களுக்கு விரைவான டெலிவரி சேவைகளை வழங்கி வருகின்றனர். தற்போது அமேசான் நிறுவனம் அதன் டிரையல் சேவையை பெங்களூருவில் ஆரம்பித்துள்ளது. வரக்கூடிய மாதங்களில் இன்னும் அதிகமான மின்னஞ்சல் குறியீடுகள் டெலிவரி சேவைகளுக்கு சேர்க்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

10 நிமிட டெலிவரி என்பது கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தினாலும், டெலிவரி நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இது அதிக பயன்களை அளிக்கிறது. இந்த டெலிவரி சேவையை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களிலேயே உங்களால் ஐபோன் 16 அல்லது ப்ளேஸ்டேஷன் 5 கண்சோல் போன்றவற்றை கூட பெற முடியும். எதிர்காலத்தில் இந்த துறையில் இன்னும் ஏராளமான நிறுவனங்கள் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த விரைவான வணிக தளம் 6 மில்லியன் டாலர் மதிப்பை கொண்டுள்ளது. மேலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த போட்டியில் இணையும் பட்சத்தில் அதன் மதிப்பு இன்னும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

விளம்பரம்
நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ரஜினிகாந்தின் 13 பிளாக்பஸ்டர் படங்கள்.!


நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ரஜினிகாந்தின் 13 பிளாக்பஸ்டர் படங்கள்.!

Flipkart ஏற்கனவே இந்த பந்தயத்தில் இணைந்து விட்டது. இப்போதைக்கு Blinkit, Zepto மற்றும் Swiggy Instamart ஆகியோர் முன்னணியில் உள்ளனர். அமேசான் நிறுவனத்தின் இந்த வருகை பிற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். எனவே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இன்னும் விரைவான டெலிவரி சேவைகளை கஸ்டமர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டும் அல்லாமல் இந்த டெலிவரி சேவை நிறுவனங்கள் கஸ்டமர்களை ஈர்ப்பதற்கு அதிக டிஸ்கவுண்டுகள் மற்றும் அதிகமாக அளவிலான ப்ராடக்டுகளை வழங்கி இந்த போட்டியில் முன்னேறி வருவதற்கு முயற்சி செய்வார்கள். எதிர்காலத்தில் இ-காமர்ஸ் மற்றும் விரைவான டெலிவரி சேவைகள் மிகப்பெரிய பிசினஸ் ஆக உருவெடுக்க போகிறது என்று ஆய்வாளர்களும் கணித்துள்ளனர்.

விளம்பரம்

.



Source link