ஆனால் மேற்குறிப்பிட்ட இந்த முறைகளுக்கெல்லாம் இணைய வசதி கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால், எதிர்பாரத விதமாக இணைய சேவை துண்டிக்கப்படும் பட்சத்தில் பணம் அனுப்ப இயலாது. எனவே, இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக, இணைய வசதி இல்லாமல் யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும் ஒரு புதிய வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இணைய வசதி இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் இந்த சேவையை, பயனர்கள் அதிகாரப்பூர்வ யூஎஸ்எஸ்டி (USSD) குறியீட்டான *99# ஐ டயல் செய்வதன் மூலம் வங்கி சேவைகளை ஆஃப்லைனில் அணுக உதவுகிறது. இந்த எண்ணின் மூலம், பயனர்கள் வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள், கணக்கு இருப்புகளைச் சரிபார்த்தல் மற்றும் யுபிஐ பின்களை அமைத்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வங்கி வசதிகளை பெற முடியும்.

பணம் செலுத்துவதற்கு யூஎஸ்எஸ்டி (USSD) குறியீட்டை பயன்படுத்துவது எப்படி?:

* முதலில் உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99# ஐ டயல் செய்ய வேண்டும்.

* பின்னர், உங்கள் தொலைபேசியின் திரையில், உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க சரியான எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும்.

* அதில், பணத்தை அனுப்புதல், இருப்பை சரிபார்த்தல் அல்லது முந்தைய பரிவர்த்தனைகளைப் பார்ப்பது போன்ற வசதிகள் இருக்கும், அதில் உங்களுக்கு தேவையான வசதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

* உதாரணமாக, பணத்தை அனுப்ப, ‘1’ என டைப் செய்து அனுப்பு என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

* மொபைல் எண், யூபிஐ ஐடி, கான்டாக்ட் அல்லது வேறு விருப்பம் போன்ற விருப்பங்களில், பணத்தை அனுப்புவதற்கான முறையைத் தேர்ந்தெடுத்து அனுப்பு என்பதை தொட வேண்டும்.

* நீங்கள், மொபைல் எண் விருப்பத்தைப் தேர்வு செய்தால், பணம் பெறுபவரின் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும்.

* பின்னர், அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு அனுப்பு என்பதை அழுத்தி, பரிவர்த்தனையை முடிக்க உங்கள் யூபிஐ பின்னை டைப் செய்ய வேண்டும். இதையடுத்து, இறுதியாக உங்களது வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு பணம் அனுப்பப்படும்.

* நீங்கள் விரும்பும் பட்சத்தில், அந்த பரிவர்த்தனைக்கு பின்குறிப்பைச் சேர்க்கலாம்.



Source link