HP நிறுவனமானது தனது முதல் 2 இன் 1 AI அடிப்படையிலான புதிய ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் லேப்டாப்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது HPயின் முதல் அர்டிபிசில் இன்டெலிஜெண்ட் அடிப்படையிலான லேப்டாப் ஆகும். இது இன்டெல் லூனார் லேக் (கோர் அல்ட்ரா சீரிஸ் 2) ப்ராசசரை பெறுகிறது. மேலும், இந்த டிவைஸில் உள்ள AI பணிகளை திறமையாக கையாள பிரத்யேக நியூரல் ப்ராசசிங் யூனிட் (NPU) உள்ளது. இந்த லேப்டாப்பின் பேட்டரி ஆயுளும் அற்புதமானது. இந்த லேப்டாப்பின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் HP ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் விலை:
HP ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் 2 இன் 1 லேப்டாப் ஆனது எக்ளிப்ஸ் கிரே மற்றும் அட்மாஸ்பேரிக் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் இந்தியாவில் ரூ.1,81,999 விலையில் தொடங்குகிறது.
HP ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் அம்சங்கள்:
HP ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் லேப்டாப் ஆனது 2,880x,1,800 பிக்சல்கள் ரெசலூஷன் கொண்ட 14-இன்ச் 2.8K OLED டிஸ்ப்ளேவைக் கொண்ட 2-இன்-1 லேப்டாப் ஆகும், இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃபிரேஷ் ரெட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆகியவற்றை ஆதரிக்கிறது. யூசர்கள் இதை லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட் போன்ற நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப் ஆனது ஹாப்டிக் டச்பேட் மற்றும் 9 மெகாபிக்சல் AI கேமரா மற்றும் பாலி ஆடியோ ஆகியவற்றை கொண்டுள்ளது. பாலி லேப்டாப் ப்ரோ ஆனது ஸ்பாட் லைட், பேக்கிரௌண்ட் ப்ளர் போன்ற அர்டிபிசில் இன்டெலிஜெண்ட் திறன்களுடன் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் இன்டெல் கோர் அல்ட்ரா 7 256V ப்ராசசர், 32GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB PCIe Gen4 NVMe M.2 SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களுக்காக இந்த லேப்டாப்பில் Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்ஸ், USB டைப்-C மற்றும் 3.5 mm ஆடியோ உள்ளது.
ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த லேப்டாப்பில் 64Wh பேட்டரி உள்ளது, முழு சார்ஜில் அதன் பேட்டரி 21 மணி நேரம் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் எடை 1.34 கிலோ ஆகும்.
HP ஆனது AI பாதுகாப்பு அமைப்பான HP வுல்ஃப் செக்யூரிட்டியை இந்த லேப்டாப்பில் சேர்த்துள்ளது. இது சைபர் கிரைம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து டிவைஸ் மற்றும் டேட்டாக்களை பாதுகாக்கிறது. மேலும் இதில் AI டீப்ஃபேக் டிடெக்டரும் உள்ளது. இவை அனைத்தும் டேட்டாக்களை பாதுகாக்கவும், பிறரால் ஹேக் செய்யப்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
.