Last Updated:
இதன்பின் படம் வேறு இயக்குநர் இயக்க, விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியானது. எனினும், விக்ரம் மற்றும் பாலா இருவருமே இதைப்பற்றி எதுவுமே பேசாமல் இருந்தனர். சமீபத்தில் பாலாவின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.
நடிகர் விக்ரமுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கினார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்தார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்தனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும், இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் கூறியது.
இதற்கு காரணமாக, “நாங்கள் எதிர்பார்த்தது போல ‘வர்மா’ படத்தை பாலா இயக்கித் தரவில்லை” என்று தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டதாகவும், பாலா அதற்கு மறுத்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது. அதேநேரம், நடிகர் விக்ரம் முழு படத்தை பார்த்ததாகவும் சில காட்சிகளில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதால் படத்தை மீண்டும் இயக்க அவர் கூறியதாகவும் தகவல்கள் சொல்லப்பட்டன.
இதன்பின் படம் வேறு இயக்குநர் இயக்க, விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியானது. எனினும், விக்ரம் மற்றும் பாலா இருவருமே இதைப்பற்றி எதுவுமே பேசாமல் இருந்தனர். சமீபத்தில் பாலாவின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.
இதிலும் விக்ரம் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், தான் ‘வணங்கான்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியளித்து வருகிறார் பாலா. இதில் விக்ரம் பற்றியும் ‘வர்மா’ படம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் விக்ரம் பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, “அந்த அமைதி தான் பதில்” என்று கூறி பதிலளிப்பதை தவிர்த்த பாலா, ‘வர்மா’ படம் குறித்து விருப்பமில்லை என்ற வகையில் நடந்துகொண்டார். இதன்மூலம் விக்ரமுக்கும் பாலாவுக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 29, 2024 9:44 PM IST