இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில், முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இதேபோன்று, தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசா ஹென்ரிக்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இதையும் படிக்க:
கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா? மீண்டும் கேப்டனாகும் மூத்த வீரர்?
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா களம் காண்கிறது.
அதேசமயம், ஐபிஎல் ஏலம் விரைவில் வர உள்ளதால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்க்க இந்திய இளம் வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, யாஷ் தயாள், அவேஷ் கான்
தென் ஆப்பிரிகா உத்தேச அணி:
ரீசா எண்ட்ரிக்ஸ், ஏடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கெட்டன், ஹெய்னிரிக் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், பேட்ரிக் கிரூகர், ஓட்நெயில் பார்ட்மன், ஜெரால்ட் கோட்ஸீ, கேஷவ் மகாராஜ்
.