மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகள் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (03) தெரிவித்தார்.

அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த செப்டம்பர் ,ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்படி,

12.5kg: ரூ. 3,690 இற்கும்
5kg : ரூ. 1,482 இற்கும்
2.3kg : ரூ. 694 இற்கும் விற்பனையாகிறது.

இம்மாத லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

The post இம்மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை appeared first on Thinakaran.



Source link