Last Updated:
ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள் மிகுந்த விறுவிறுப்பாக இருப்பதாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர் .
யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மாநாடு, வணங்கான் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்துடைய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் எந்த ஜேனர் என கணிக்க முடியாத அளவுக்கு ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளன.
An epic adventure awaits. Experience the magic of #YezhuKadalYezhuMalai. – Trailer out now🤗
Watch now ▶️: https://t.co/ex0IRfTHBE@sureshkamatchi @vhouseofficial @NivinOfficial @yoursanjali @sooriofficial @madhankarky @thisisysr @edit_mathi @thinkmusicindia #DirectorRam… pic.twitter.com/hlcLZVKmRV— Think Music (@thinkmusicindia) January 20, 2025
Happy to share 😍https://t.co/bg91FTD0qH#YezhuKadalYezhuMalai’s TRAILER OUT NOW!#TrailerAlert #LiveAlert@sureshkamatchi @vhouseofficial @NivinOfficial @yoursanjali @sooriofficial @madhankarky @thisisysr @edit_mathi @thinkmusicindia #DirectorRam
— Actor Soori (@sooriofficial) January 20, 2025
ட்ரெய்லரில் நிவின் பாலி மற்றும் சூரியின் நடிப்பு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
January 20, 2025 7:12 PM IST