MyAadhaar மற்றும் MAadhaar ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்தியர்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான தேவையாகும். அதை அவர்கள் அனைத்திற்கும் ஐடியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இது தவிர, அனைத்து அரசு ஆவணங்கள் மற்றும் வங்கிப் பணிகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆதார் அட்டையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இதன் காரணமாக, நீங்கள் ஆன்லைனில் எளிதாக பயன்படுத்தலாம்.

UIDAI அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) mAadhaar மற்றும் MyAadhaar ஆகிய இரண்டு தளங்களின் விருப்பத்தை வழங்குகிறது. ஆதார் அட்டை தொடர்பான பணிகளைச் செய்ய இரண்டு தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்த தளங்கள் வெவ்வேறு பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அவற்றின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

விளம்பரம்

Also Read:
ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா..? ரூ.7 லட்சம் உங்களுக்கு தான்.. எப்படி தெரியுமா?

mAadhaar மற்றும் MyAadhaar

mAadhaar என்பது மொபைல் ஆப் ஆகும். இது யூசர்கள் பயணத்தின்போது தங்கள் ஆதார் டேட்டாவை அணுகவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. MyAadhaar என்பது, UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். இது ஆதார் அப்டேட், டவுன்லோட் மற்றும் வெரிஃபிகேஷன் போன்ற பல ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. தற்போது இரண்டு தளங்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். mAadhaar என்பது ஆண்ட்ராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போன்களுக்கான மொபைல் அடிப்படையிலான ஆப் ஆகும். MyAadhaar என்பது லாகின் அடிப்படையிலான போர்டல் ஆகும். ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் அடிப்படையிலான ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்

mAadhaar இன் நன்மைகள்

இது ஆதார் வைத்திருப்பவர்களுக்காக UIDAI-ஆல் உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் ஆகும். இந்த ஆப் ஆனது யூசர்கள் தங்களுடைய மொபைல் டிவைஸ்களில் இருந்தே தங்கள் ஆதார் டேட்டாவை அணுகவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.

நீங்கள் ஏன் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்.!


நீங்கள் ஏன் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்.!

முக்கிய அம்சங்கள்

  • mAadhaar இன் உதவியுடன், ஆதார் தொடர்பான தகவல்களை எங்கும், எந்த நேரத்திலும் ஒரே டேப்பில் பெறலாம்.

  • உங்களின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வெர்ஷன் எப்போதும் உங்களிடம் இருக்கும். OTP மூலம் எளிதாக லாகின் செய்யலாம்.

  • இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கான விருப்பம் உள்ளது.

  • இந்த ஆப் மூலம் உங்கள் மொபைல் எண்ணை எளிதாக அப்டேட் செய்யலாம்.

MyAadhaar இன் நன்மைகள்

MyAadhaar போர்ட்டலை பயன்படுத்துவதன் மூலம் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் நீங்கள் பெறலாம். இது நீங்கள் ஆன்லைனில் பயன்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் https://myaadhaar.uidai.gov.in/ ஆகும்.

Also Read:
House: சொந்த வீடா? அல்லது வாடகை வீடா..? அதன் சாதக, பாதகங்கள் என்ன? முழு விவரம் இதோ!

விளம்பரம்

முக்கிய அம்சங்கள்:

  • யூசர்கள் முகவரி போன்ற தங்கள் விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்யலாம்

  • ஆதார் அட்டையை டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்யலாம்

  • ஆதார் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்

  • ஆதார் என்ரோல்மென்ட்-ஐ சரிபார்க்கலாம்

  • பல்வேறு சேவைகளுடன் ஆதாரை இணைக்க முடியும்.

.



Source link