Last Updated:

இரண்டு துணை முதலமைச்சர்களுடன் ஜோடி போட்ட பிரபல நடிகைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News18

நடிகை நிதி அகர்வாலுக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர்களாக இருக்கும் உதயநிதி மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால்.  சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதியுடன் ‘கலக தலைவன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒருவர் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நிதி அகர்வால் புகார் அளித்திருக்கிறார். அதில், “சமூக வலைத்தளத்தில் என்னை பின்தொடரும் நபர் ஒருவர், தொடர்ந்து என்னை தரக்குறைவாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். திடீரென என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப் போவதாகவும், என்னை பலாத்காரம் செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார். அந்த நபரின் மிரட்டலால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நடிகை நிதி அகர்வால் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நடிகையின் புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தமிழில் மூன்று படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் சென்னையில் அவரது ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி, நிதி அகர்வாலின் சிலை வைத்து, அதற்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது. நடிகை நிதி அகர்வாலுக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link