இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.

அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.



Source link