Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: வித்தியாசம் என்ன?
OPPO Find X8 Pro மற்றும் Vivo X200 Pro இரண்டும் பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ளன. Vivo X200 Pro, Find X8 Pro-ஐ விட சற்று தடிமனாகவும், கனமாகவும் உள்ளது. இரண்டு போன்களும் உலோக பிரேம், கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் தூசி, நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.
இரண்டு போன்களும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், Find X8 Proல் உள்ள வளைவு Vivo X200 Pro போல தெளிவாக இல்லை. Vivo X200 Pro மற்றும் OPPO Find X8 Pro ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. OPPO Find X8 Pro மற்றும் Vivo X200 Pro ஆகியவை Android 15 ஓஎஸ்-ல் இயக்குகின்றன. Vivo X200 Pro போனில் FuntouchOS, OPPO Find X8 Pro ஆனது ColorOS-ஐ கொண்டுள்ளது.
இரண்டு போன்களும் சிலிக்கான் கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், X200 Pro-வில் உள்ள பேட்டரி Find X8 Pro-வை விட சற்று பெரியது. மறுபுறம், OPPO Find X8 Pro வேகமான வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகிறது, அதே நேரத்தில் வயர்டு சார்ஜிங் X200 Pro-வில் சற்று வேகமாக உள்ளது.
Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: கேமராக்கள்:
Vivo X200 Pro, ZEISS உடன் இணைந்து உருவாக்கப்பட்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது CIPA 4.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் f/1.57 aperture கூடிய 50MP Sony LYT-818 சென்சார் மூலம் இயங்குகிறது. இது f/2.67 aperture கொண்ட 200MP Samsung HP9 ZEISS APO சூப்பர் டெலிஃபோட்டோ லென்ஸையும், f/2.0 aperture கொண்ட 50MP Samsung ISOCELL NJ1 அல்ட்ராவைடு லென்ஸையும் கொண்டுள்ளது. இது V3+ இமேஜிங் சிப் மற்றும் 32MP Samsung ISOCELL KD1 செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: மேம்படுத்தப்பட்ட AI மற்றும் ஹெல்த் அம்சங்களுடன் ஏர்போட்ஸ் ப்ரோ 3 ஐ உருவாக்கும் ஆப்பிள்!
OPPO Find X8 Pro-வில் f/1.6 aperture, OIS மற்றும் 1/1.4″ சென்சார் அளவு கொண்ட 50MP Sony LYT-808 பிரதான கேமரா, f/2.0 aperture மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50MP Samsung ISOCELL JN5 அல்ட்ராவைடு லென்ஸ், f/2.6 aperture மற்றும் OIS கொண்ட 50MP Sony LYT-600 73mm பெரிஸ்கோப் ஷூட்டர், f/4.3 aperture மற்றும் OIS கொண்ட 50MP 135mm Sony IMX858 பெரிஸ்கோப் யூனிட் ஆகியவை உள்ளன. முன்புறத்தில், 32MP Sony IMX615 செல்ஃபி கேமரா உள்ளது.
இதையும் படிக்க: 5 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
Vivo X200 Pro மற்றும் OPPO Find X8 Pro இடையேயான வேறுபாடுகள் மிகக் குறைவு. இருப்பினும், இரண்டில் ஒன்றை நாம் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், கேமரா திறன்களைப் பொறுத்தவரை Vivo X200 Pro சிறப்பாக உள்ளது. மேலும் X200 Pro சற்று மலிவானது என்பதால், Find X8 Pro-வை விட பலரும் விவோவை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மறுபுறம், OPPO Find X8 Pro நீண்ட கால பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக அமையக்கூடும்.
December 27, 2024 1:02 PM IST