நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 9930 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
கலாவெவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் 10 அடி உயரத்தில் திறக்கப்பட்டு வினாடிக்கு 10430 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் தெரிவித்தார். இராஜாங்கனை மற்றும் கலாவெவ நீர்த்தேக்க பகுதியில் தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்
The post இராஜாங்கனை, கலாவெவயின் வான் கதவுகள் திறப்பு appeared first on Thinakaran.