அநுராதபுரம் பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த டிமோ பட்டா ரக லொறி ஒன்றும், அனுராதபுரத்தில் இருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு லொறிகளும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வீதியோரங்களில் இருந்த பல கடைகளும் சேதமடைந்துள்ளது.

தம்புத்தேகம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த மாம்பழம் சேகரிக்கச் சென்ற டிமோ பட்டா ரக லொறி ஒன்றும், அனுராதபுரம் பகுதியில் இருந்து குற்றுக்கள் ஏற்றிச்சென்ற பிரைம் மூர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் குறித்த லொறி மரத்துடன் மோதி நின்றுள்ளது.

விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் டிமோ பட்டா லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

அதன்படி தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் நால்வர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

The post இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி appeared first on Thinakaran.



Source link