Last Updated:
31.3 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்னும் வெற்றிக்கு 49 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் மார்க்கோ யான்சென் மற்றும் கசிகோ ரபடா இணை சிறப்பாக விளையாடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. முதல் முறையாக அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் மேட்ச்களில் அதிக முறை வெற்றி பெற்று, வெற்றி சதவீதம் அதிகம் கொண்ட 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அந்த வகையில் இரு முறை நடந்து முடிந்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பங்கேற்றது. இருப்பினும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கடும் போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெற்றி சதவீதம் அதிகம் பெற்று முதல் அணியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்களும் எடுத்தது,
தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடியது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து பேச்சாளர் முகமது அப்பாஸின் சிறப்பான பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படிங்க – IND vs AUS | கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!
31.3 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்னும் வெற்றிக்கு 49 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் மார்க்கோ யான்சென் மற்றும் கசிகோ ரபடா இணை சிறப்பாக விளையாடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தது.
???????????????????? ???????????????????????????????? ???????????????????????????????????? 🇿🇦
South Africa are headed to Lord’s for the #WTC25 Final 🤩 #SAvPAK ➡ https://t.co/vWLh4MSQjm pic.twitter.com/sZ5QBnDAYD— ICC (@ICC) December 29, 2024
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதை தென்னாப்பிரிக்க அணி உறுதி செய்துள்ளது. முதன் முறையாக அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read: WTC 2023 – 2025 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இனியும் இந்தியா தகுதிபெற வாய்ப்புள்ளதா?
December 29, 2024 8:24 PM IST