இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது அரசாங்கத்தின் வலுசக்தி தொடர்பான வேலைத்திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்குமென இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு மேலும் பலப்படுத்தப்படும்.

மேலும், மத வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் சூரிய படல வேலைத்திட்டமும் தொடருமென இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.





Source link