பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது.

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

“இந்நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம். பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம். இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம்.”

இதற்கிடையில், சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணைத்தளம் குறித்து சாருக தமுனுகல தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

“இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம்”



Source link