இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது.
இதன்படி கடந்த வருடம் 1.515 டிரில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இது ஒரு வருடத்தில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும்.
2024ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய 1.533 டிரில்லியன் ரூபா வருமான இலக்கை இலங்கை சுங்கம் அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
The post இலங்கை சுங்கத்துறையிடமிருந்து சாதனைமிக்க வருமானப் பதிவு appeared first on Daily Ceylon.