ஒருவேளை நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பல்வேறு திட்டங்களை நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பிரிவின் கீழ் ஜியோவின் மிகவும் குறைவான ரீசார்ஜ் ஆப்ஷன்களை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் மிகவும் பட்ஜெட் ஃபிரண்ட்லியான ஒரு திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் போன் கால்கள், இன்டர்நெட் டேட்டா, SMS மற்றும் இன்னும் கூடுதலான பல சலுகைகளை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் 479 ரூபாய் திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் 479 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது ஜியோவின் மிகவும் விலை மலிவான ஒரு ரீசார்ஜ் திட்டமாக அமைகிறது. இந்த திட்டத்தில் யூசர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்கள் கிடைக்கின்றன. மேலும் மொத்த வேலிடிட்டி காலத்திலும் 6GB இன்டர்நெட் டேட்டாவை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இன்னும் இன்டர்நெட் டேட்டா தேவைப்பட்டால் நீங்கள் ஒரு ஜியோ டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த ரிலையன்ஸ் ஜியோ திட்டம் யாருக்கானது? அனைவரும் வாங்கக்கூடிய விலையில் 84 நாட்கள் வேலிடியுடன் கிடைக்கும் இந்த திட்டம் 6GB மொத்த டேட்டாவை வழங்குவதால் ஒரு சில யூசர்கள் இதனை மிகக் குறைவாக கருதலாம். எனினும் போன் கால்ஸ்களை மட்டுமே எதிர்பார்த்து ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்க நினைக்கும் யூசர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். வீடு அல்லது அலுவலகத்தில் வைஃபை ஆக்சஸ் கொண்டவர்களுக்கு அதிக மொபைல் டேட்டா தேவைப்படாது. அவர்களுக்கு இது மாதிரியான திட்டம் தேவைப்படும்.
479 ரூபாய் திட்டத்திற்கான கூடுதல் பலன்கள்
இந்த 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் யூசர்கள் மொத்தமாக 1000 இலவச SMS-ஐப் பெறுகிறார்கள். கூடுதலாக இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான இலவச ஆக்சஸ் கிடைக்கிறது. ஜியோ டிவி மூலமாக யூசர்கள் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கலாம். இந்த பட்ஜெட் ஃபிரண்ட்லி ஜியோ ரீசார்ஜ் திட்டம் ஜியோ போர்டல் மற்றும் மை ஜியோ அப்ளிகேஷனில் உள்ள ப்ரீபெய்டு கேட்டகிரியில் வேல்யூ செக்ஷனின் கீழ் கிடைக்கிறது.
இதையும் படிக்க:
ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைத்த Yes வங்கி!!!
வெறும் அன்லிமிடெட் போன் கால்களுக்காக இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு இந்த ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் திட்டம் அருமையான ஆப்ஷனாக இருக்கும். குறைவான டேட்டா மற்றும் அன்லிமிடெட் போன் கால்ஸ்கள் கிடைக்கும் இந்த 479 ரூபாய் திட்டம், இனி பல ஜியோ யூசர்களின் ஃபேவரட்டான ரீசார்ஜ் திட்டமாக இருக்கும்.
.