Last Updated:

Shankar | நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

News18

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் நாளை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.10,000 கோடி வசூலித்த ஒரே இந்திய நடிகை..யார் இவர்? 

இந்நிலையில் இந்தப் படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் பங்கேற்ற ஷங்கரிடம், ‘ஏதாவது வாழ்க்கை வரலாற்று (பயோபிக்) படத்தை எடுக்க விருப்பம் இருக்கிறதா?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷங்கர், “எடுத்தால் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையைத்தான் திரைப்படமாக எடுக்க வேண்டும்.

இதுவரை பயோபிக் எண்ணம் இல்லை. ஆனால், கேட்டவுடன் அவரின் பெயர்தான் நியாபகம் வருகிறது. மிகவும் இனிமையானவர்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link