நாம் இதுவரையில் பெரிதும் கண்டிராத எண்ணெய் வகை.இது நறுமணப் பயிராகவும், வாசனை திரவியங்கள், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள் மற்றும் திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் ‘லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சை புல்.
தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப்புல் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனைப் பற்றி மக்கள் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.இவ்வளவு நற்குணங்கள் கொண்டுள்ள இந்த அரியவகை எலுமிச்சை புல்லை வளர்த்து அறுவடை செய்து எலுமிச்சை புல் எண்ணெய் (Lemon Grass Oil) தயாரித்து வருகிறார் சேலம் மாவட்டம், காடையம்பட்டி, மூக்கனூர் கிராம பகுதியைச் சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர்.பல ஆண்டுகளாக மரிக்கொழுந்துஎண்ணெய் (DAVANA OIL) தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எலுமிச்சை புல் எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறார்.
எண்ணெய் தயாரிப்பு குறித்து மோகனசுந்தரம் கூறியதாவது; ” நான் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், மோகனூர் கிராம பகுதியைச் சேர்ந்தவர்.நாங்கள் பல ஆண்டுகளாகவே குலத் தொழிலாக மரிக்கொழுந்தில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எலுமிச்சைப்புல்லில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.இதில் பல நற்குணங்கள் உள்ளதால் மருந்துகள் தயாரிப்புக்கும் உதவுகிறது.
இதையும் வாசிக்க : பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய் : விடுபடுவது எப்படி ?
வாசனை திரவியங்கள், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள் மற்றும் திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்குகிறது. வயிறு சார்ந்த பிரச்சனைகள், உடல் எடையை எளிதில் குறைக்க, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
இவ்வளவு நற்குணங்கள் மிக்க எண்ணெயை தயாரிப்பது எப்படி என்றால்?முதலில் நன்றாக வளர்ந்த எலுமிச்சை புல்லை சாகுபடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனைநீராவியால் வேக வைத்துகுழாய் வழியாக நீரும் எண்ணையும் கலந்த எண்ணெய் வித்துக்கள் வெளியேறும். பின்னர் அதனை குளிர்விக்கப்பட்டு எண்ணெய்யை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இம்முறையை கையாளுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் தொழிலிற்கேற்ப தேவையான உபகரணங்கள் இருந்தால் எதுவும் சாத்தியமே.ஒரு முறை இந்த எலுமிச்சையின் புள்ளி நடவு செய்தால் தொடர்ந்து மூன்று நான்கு வருடங்களுக்கு அது வளர்ந்து கொண்டே இருக்கும். நாம் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கலாம்.
இந்த எண்ணையின் சந்தை மதிப்பு லிட்டருக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது மிகவும் லாபகரமான தொழில்தான் இதை நான் விரும்பி கையாண்டு வருகிறேன். இந்த எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுவது எனக்கு நீண்ட நாள் கனவு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த தொழிலின் மீது அதீத பிரியம்” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.