இஸ்ரேல் – பாலஸ்தீனம் என்றிருந்த போர்க்களம், தற்போது, இஸ்ரேல் – ஈரான் என உக்கிரமடைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானமாக ஈரான் எடுத்துக் கொண்டது. தங்களின் ஆணிவேர்களை அசைத்து பார்த்ததாக கருதிய ஈரான், இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்தது. இதன் காரணமாக தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படிப்பு, வேலை, உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அவர்களின் நிலை என அவரகளது குடும்பத்தினர் இங்கு கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலைக்கு விடையளிக்கும் விதமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எந்த இந்தியரும் அபாயகரமான நிலையில் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார். இதனிடையே இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட்டது.

இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,769 புள்ளிககள் சரிந்து 82,497 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.

இதையும் படியுங்கள் :
இஸ்ரேல் – ஈரான் போர் இன்னும் உக்கிரமாகுமா..? நிபுணர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 546 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ONGC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

விளம்பரம்

.



Source link