Last Updated:

முதல் நான்கு நாட்களில் காராமணி விதை முளைக்கத் தொடங்கின.

News18

இஸ்ரோவின் திட்டங்களில் ஒன்றான விண்வெளியில் செடி வளர்ப்புத்திட்டத்தின் சோதனை அண்மையில் வெற்றி பெற்ற நிலையில் காராமணி விதைகளில் இரண்டு இலைகள் துளிர்விடத் தொடங்கின.

பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்களில் பல்வேறு சோதனைகளை இஸ்ரோ செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராப்ஸ் என்ற திட்டத்தின் மூலம் விண்வெளியில் 8 காராமணி விதைகள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

விண்வெளியில் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற விண்கலத்தில் முதல் நான்கு நாட்களில் காராமணி விதை முளைக்கத் தொடங்கின. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி முளைக்கத் தொடங்கிய காராமணி விதைகளில் இரண்டு இலைகள் துளிர் விடத் தொடங்கியுள்ளன.

விண்வெளியில் காராமணி விதைகள் துளிர்விட்டது மிகப்பெரிய மைல்கல் என்று இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.



Source link