இஸ்ரேல் – பாலஸ்தீனம் என்றிருந்த போர்க்களம், தற்போது, இஸ்ரேல் – ஈரான் என உக்கிரமடைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானமாக ஈரான் எடுத்துக் கொண்டது. தங்களின் ஆணிவேர்களை அசைத்து பார்த்ததாக கருதிய ஈரான், பொருத்தது போதும் பொங்கி எழு என்ற விதத்தில், இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்தது.
இந்த போர், நாளடைவில் உக்கிரமடைந்து அதன்பிறகே, போர் தணிவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஓய்வுபெற்ற வெளியுறவுத்துறை அதிகாரி மாணிக்கம், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு போர் போல் நடந்து அதன்பிறகு தான் இது நிறைவடையும்” என்று தெரிவித்தார்.
ஹமாஸை ஒழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பதால், இந்த போர் விரைவில் முடிவடையாது என ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் மாதேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது; “ஹமாஸை ஒழிப்பது தான் எங்களது நோக்கம். அதற்காக இஸ்ரேலுக்கு எங்களின் முழு ஆதரவை கொடுப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன்னும் பெரிதாக போர் வெடிக்கலாம். அப்படியானால், அது இஸ்ரேலுக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார். மேலும், ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல், மூன்றாவது உலகப் போராக மாற வாய்ப்பு இருப்பதாக மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
.