ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பெரிதளவில் பேசப்பட்ட உகண்டாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொடஹெச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கேள்வி: அரிசி ஒரு கிலோ 270 ரூபா! அப்படித்தானே?
பதில்: ஆம், ஆம்.
கேள்வி: மாற்றம் ஒன்று வருமா?
பதில்:- நிச்சயம் வரும்.
கேள்வி: உகண்டாவுக்கு கொண்டு சென்றதாக சொன்ன அந்த பணம்? கொண்டு வருவீர்களா?
பதில்: நிச்சயம் மிக விரைவில் அதனை நாங்கள் கொண்டு வருவோம்.
ஆனால் இதற்கு முன்னர் தங்கள் தரப்பில் இருந்து அப்படி உகண்டாவுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
அந்த பணம் சட்ட ரீதியாக இலங்கையில் அச்சிடப்பட்ட உகண்டா பணம் எனவும் அக்கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post உகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம் appeared first on Daily Ceylon.