Last Updated:

ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல். அதிபர் தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவரிடம் டிரம்ப் பேசியிருப்பது முதல் முறையாகும்.

புதின் – டிரம்ப்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை நீட்டிக்க வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரியில் பதவியேற்க இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பேசிய டிரம்ப், போர்களை தான் தொடங்கவில்லை என்றும், அதே நேரம் போர்களை நிறுத்த முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவரிடம் டிரம்ப் பேசியிருப்பது முதல் முறையாகும்.

ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை நிலை நிறுத்த இருதரப்பினரும் பேசியதாகவும், உக்ரைன் மீதான போரை விரைவில் நிறுத்த டிரம்ப் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டிரம்ப் வெற்றியால் இந்தியா பதற்றம் அடையவில்லை…வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

டிரம்ப்பின் நிலைப்பாட்டால் ரஷ்ய அதிபர் மாளிகை மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.



Source link