பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவையான ஒன்றாகும். பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயம் பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

விளம்பரம்

அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

அதேசமயம், இந்த வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயம். ஒரு நபரால் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

Also Read: 
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!

விளம்பரம்

News18

எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு அவசியம்?

நாம் செய்யும் பல முக்கியமான விஷயங்களுக்கு பான் கார்டு வைத்திருப்பது கட்டாயம். ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்க பான் கார்டு தேவை. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு அவசியம். அந்த, டிமேட் கணக்கை பான் கார்டு இல்லாமல் நம்மால் திறக்க முடியாது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு அவசியம். இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு அவசியம்.

விளம்பரம்

இதையும் படிக்க: ரூ.198 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய நபர்; இந்த குடியிருப்பில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஒரே ஒரு பான் கார்டு

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை பயன்படுத்த முடியாது. அந்த ஒரு பான் கார்டைத்தான் பண பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்த முடியும்.

விளம்பரம்

.



Source link