ஒரு காரை வாங்குவது என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிதி சார்ந்த முடிவாகும். மேலும் புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் கடன் வட்டி விகிதங்கள், நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகள் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பயன்படுத்திய கார் மற்றும் புதிய கார் கடன்கள் இரண்டிலும் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. எந்த விருப்பம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்க உதவும் விரிவான வழிகாட்டி இதோ…

விளம்பரம்

வட்டி விகிதங்கள்: அவை எவ்வாறு வேறுபடுகின்றன?

புதிய கார் கடன்கள்:

பொதுவாக, புதிய கார் கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களுடன் 7% முதல் 10% வரை இருக்கும். உங்கள் கிரெடிட் சுய விவரத்தைப் பொறுத்து மாறுபடலாம். புதிய கார்களை மறுவிற்பனை செய்கையில் அதிக மதிப்பைக் கொண்டிருப்பதால், குறைவான வட்டியில் கிடைக்கின்றன.

பயன்படுத்திய கார் கடன்கள்:

பயன்படுத்திய கார்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக 10% முதல் 15% வரை அதிகமாக இருக்கும். பயன்படுத்திய கார்களின் குறைந்த மறுவிற்பனை மதிப்பு காரணமாக கடன் வழங்குவோருக்கு அதிகமாக வட்டி விகிதங்கள் இருக்கின்றன.

விளம்பரம்

புதிய கார் கடனின் நன்மைகள்:

குறைந்த வட்டி விகிதங்கள்: புதிய கார் கடன்கள் பெரும்பாலும் குறைந்த வட்டி விகிதங்களை ஈர்க்கின்றன. இது உங்கள் ஒட்டுமொத்த கடன் செலவைக் குறைக்கிறது.

நீண்ட கடன் காலம்: வங்கிகள் பொதுவாக புதிய கார் கடன்களுக்கு நீண்ட திருப்பிச் செலுத்தும் காலங்களை வழங்குகிறார்கள். இதனால் மாதாந்திர தவணை தொகைகள் மிகவும் குறைவாக இருக்கும்.

உத்தரவாத நன்மைகள்: புதிய கார்கள் பொதுவாக உற்பத்தியாளர் உத்தரவாதங்களுடன் வருகின்றன. இது ஆரம்ப ஆண்டுகளில் வரும் பராமரிப்பு செலவுகளைக் குறைக்கிறது.

விளம்பரம்

புதிய அம்சங்கள்: புதிய காரை வாங்குவதால் சமீபத்திய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எரிபொருள் திறன் கொண்ட மாடல்களுக்கான ஆப்ஷனை வழங்குகிறது.

பயன்படுத்திய கார் கடனின் நன்மைகள்:

குறைந்த முன்செலவு: பயன்படுத்திய கார்கள் கணிசமாக மலிவானவை. இதன் விளைவாக குறைந்த கடன் தொகை மற்றும் இஎம்ஐ குறைக்கப்படுகின்றன.

குறைந்த தேய்மானம்: ஒரு புதிய கார் முதல் ஆண்டில் அதன் மதிப்பில் சுமார் 20-30% இழக்கிறது. ஆனால் பயன்படுத்திய கார் மெதுவான விகிதத்தில் தேய்மானம் ஆகிறது.

கட்டுப்படியாகக்கூடிய காப்பீட்டு பிரீமியங்கள்: பயன்படுத்திய கார்களுக்கான காப்பீட்டுச் செலவுகள் புதிய வாகனங்களை விட குறைவாக இருக்கும்.

விளம்பரம்

விரைவான கடன் ஒப்புதல்: பல கடன் வழங்குநர்கள் இப்போது குறைந்த ஆவணங்களுடன் பயன்படுத்திய கார்களுக்கு விரைவான கடன் செயலாக்கத்தை வழங்குகிறார்கள்.

இதையும் படிக்க:
ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி…???

புதிய கார் கடனின் பாதகங்கள்

அதிகரிக்கும் ஒட்டுமொத்த செலவு: குறைந்த வட்டி விகிதங்கள் இருந்தபோதிலும், வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் சாலை வரிகள் காரணமாக புதிய காரை வைத்திருப்பதற்கான மொத்த செலவு அதிகமாக உள்ளது.

தேய்மானம்: புதிய கார்கள் விரைவாக மதிப்பை இழக்கின்றன. சில வருடங்களுக்குள் நீங்கள் காரை விற்க திட்டமிட்டால் மறு விற்பனை மதிப்பை பாதிக்கலாம்.

விளம்பரம்

பயன்படுத்திய கார் கடனின் பாதகங்கள்

அதிக வட்டி விகிதங்கள்: கடன் வாங்குவதற்கான செலவு அதிகமாக இருப்பதால், பயன்படுத்திய கார் கடன்கள் குறைவாகவே ஈர்க்கும்.

வரையறுக்கப்பட்ட கடன் காலம்: கடன் அளிப்பவர்கள் வழக்கமாக பயன்படுத்திய கார்களுக்கு குறைவான திருப்பிச் செலுத்தும் காலங்களை வழங்குகிறார்கள். இது அதிக இஎம்ஐ-களுக்கு வழிவகுக்கும்.

அதிக பராமரிப்பு செலவுகள்: பழைய கார்களுக்கு அடிக்கடி பழுது மற்றும் பராமரிப்பு தேவைப்படலாம்.

இதையும் படிக்க:
டிராவல் கிரெடிட் கார்டுகள் மூலம் ரிவார்ட் புள்ளிகளை அதிகரிப்பது எப்படி…? பின்பற்ற வேண்டிய 5 வழிகள்…

விளம்பரம்

புதிய மற்றும் பழைய கார் கடன்கள் இரண்டும் அவற்றின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. உங்கள் நிதி நிலைமை மற்றும் தேவைகளைப் பொறுத்தே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். லேட்டஸ்ட் அம்சங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களை விரும்புவோருக்கு புதிய கார் கடன்கள் ஏற்றதாக இருக்கும். அதே சமயம் குறைந்த முன்செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் தொகை வைத்திருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடன்கள் சரியாக இருக்கும்.

.



Source link