எமர்ஜென்சி என்பது நாம் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு அவசர கால சூழ்நிலை. இந்த மாதிரியான சூழ்நிலையில் நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான தேவை பணம். அது மெடிக்கல் எமர்ஜென்சி, திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை அல்லது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் எப்பொழுதும் நம்முடைய கைகளில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு சில சமயங்களில் நாம் சேமிப்புகளை முதலீடுகளில் பயன்படுத்தி இருப்போம். இந்த மாதிரியான சூழலில் நமக்கு எமர்ஜென்சி லோன்கள் கைகொடுக்கும். அவசரகால சூழ்நிலையில் பணத்தை கடனாக பெறுவதற்கு இந்தியாவில் இருக்கும் ஒரு அற்புதமான வழி எமர்ஜென்சி லோன். யூசர்களுக்கு எமர்ஜென்சி லோன் வழங்கக்கூடிய பல அப்ளிகேஷன்கள் மற்றும் ஆன்லைன் கடன் வழங்கும் பிளாட்ஃபார்ம்கள் உள்ளன.

விளம்பரம்

எமர்ஜென்சி லோன்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. இந்த மாதிரியான லோன்கள் மருத்துவச் செலவு, கல்வி, பயணம், வீட்டை மராமத்து பார்ப்பதற்கு தேவைப்படும் எதிர்பாராத செலவுகள் போன்றவற்றிற்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் இன்ஸ்டன்ட் லோன் பெறுவது பொதுவாக பாதுகாப்பானதுதான். மேலும், இந்த லோன்களுக்கு நீங்கள் எந்த ஒரு அடைமானமும் வழங்கத் தேவையில்லை.

இப்போது Money control அப்ளிகேஷன் மற்றும் வெப்சைட் மூலமாக யூசர்கள் 15 லட்ச ரூபாய் வரை லோன்களை பெறலாம். இந்த லோன் செயல்முறை 100% எந்தவொரு நேரடி ஆவணம் வழங்குதல் இல்லாமல் செய்யப்படுகிறது. Moneycontrol அப்ளிகேஷனில் இன்ஸ்டன்ட் லோன்களுக்கு ஒரு வருடத்திற்கு 12 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது.

விளம்பரம்

எமர்ஜென்சி லோன் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிமையானது. இதற்காக நாம் அதிகமாக கவலைப்பட தேவையில்லை. முதலில் நீங்கள் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லோன் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதன் பிறகு அதில் ஃப்ரீ அப்ரூவ்ட் லோன் ஆஃபர்கள் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள். ப்ரீ அப்ரூவ்ட் லோன்கள் கடன் பெறுநர்களுக்கு ஒரு சில மணி நேரங்கள் அல்லது நிமிடங்களில் கூட பணத்தை வழங்கி விடுகின்றன.

விளம்பரம்

இதையும் படிக்க:
PM Kisan Installment: PM கிசான் 19வது தவணை – தேதி, பெனிபிஸியரி ஸ்டேட்டஸ், விண்ணப்பிப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

ஆனால், இந்த மாதிரியான லோன்கள் பொதுவாக அதிக கிரெடிட் ஸ்கோர்கள் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன. உங்களுடைய ஆஃபரை சரிபார்த்த பிறகு உங்கள் தேவைக்கு ஒத்துப் போகக்கூடிய ஒன்றை தேர்வு செய்து நீங்கள் கடன் வாங்க நினைக்கும் தொகையை என்டர் செய்ய வேண்டும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்யுங்கள். குறைவான கால அளவை தேர்வு செய்தால், நீங்கள் அதிக EMI செலுத்த வேண்டும். ஆனால் இந்த சூழ்நிலையில் நீங்கள் குறைவான வட்டியை செலுத்துகிறீர்கள். இதுவே நீங்கள் நீண்ட கால அளவை தேர்வு செய்தால் தவணை குறைவாக இருந்தாலும், நீங்கள் அதிக வட்டியை செலுத்த வேண்டி இருக்கும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவரா…? ஹோம் லோன் வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை இவைதான்…

எனவே, லோன் ஆஃபர், தொகை மற்றும் கால அளவை இறுதி செய்தபின்னர், உங்களுடைய KYC டாக்குமெண்ட்களை அப்லோடு செய்யவும். ஒவ்வொரு கடன் வழங்குனர்களும் கடனை அங்கீகரிப்பதற்கு வெவ்வேறு டாக்குமெண்ட்களை கேட்கலாம். உங்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, PAN கார்டு, பேங்க் ஸ்டேட்மென்ட், கடந்த 3 மாதங்களுக்கான சேலரி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள், வருமானத்திற்கான சான்றிதழ்களை கொண்டிருக்க வேண்டும். டாக்குமெண்ட்களை வழங்கிய பின்னர், உங்களுடைய விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு ஒரு குறுகிய நேரத்திற்குள் உங்களுக்கான லோன் தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி PF பணத்தை எடுக்க எங்கும் அலைய வேண்டாம்… ATM-க்கு போனாலே போதும்!!!

இந்தியாவில் எமர்ஜென்சி லோன் பெறுவதற்கான தகுதி வரம்புகள்:

  • வழக்கமாக விண்ணப்பிப்பவர் 21 முதல் 60 வயது வரையிலான நபராக இருக்க வேண்டும்.

  • இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

  • மாத சம்பளம் பெறுபவர் அல்லது நிலையான வருமானம் பெறுபவர்களை கடன் வழங்குனர்கள் தேர்வு செய்கிறார்கள்.

  • அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்துக் கொள்வது உங்களுடைய கடன் விரைவாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்யும்.

கடன் அங்கீகரிக்கப்படுவதில் கிரெடிட் ஸ்கோரின் பங்கு

உங்களுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை நிர்ணயிப்பதில் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பொதுவாக 700க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக கடன்கள் வழங்கப்படுகின்றன.

தினசரி புரதத் தேவைக்கு எவ்வளவு பருப்பு போதுமானது.?


தினசரி புரதத் தேவைக்கு எவ்வளவு பருப்பு போதுமானது.?

இந்தியாவில் எமர்ஜென்சி லோன்கள் தற்போது மிகவும் பிரபலமான கடன் வாங்கும் ஒரு வழியாக அமைகிறது. எனினும் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு பல்வேறு லோன் அப்ளிகேஷன்கள், கால அளவுகள், வட்டி விகிதங்கள் மற்றும் ஆஃபர்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.

விளம்பரம்

.



Source link