Last Updated:

SIM card validity | உங்கள் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ஆபரேட்டர்கள் சில மலிவான விருப்பங்களையும் வழங்குகிறார்கள்.

News18

நீங்கள் Jio அல்லது BSNL, Airtel அல்லது VI-ன் சேவையைப் பயன்படுத்தினாலும் சரி. TRAI-ன் பொருந்தக்கூடிய விதிகளின் பலனை அனைவரும் பெறுவார்கள். இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் தேவையில்லை. ஆனால், அவர்களின் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரூ.20 மட்டுமே. வெறும் ரூ.20க்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

TRAI-இன் தற்போதைய விதிகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.199 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்த பிறகு உங்கள் சிம் கார்டு செயல்படுத்தப்படும். ஆனால், இதன் வேலிடிட்டியும் 28 நாட்களாகும். அதே நேரத்தில் ஆபரேட்டர்கள் வேறு சில மலிவான விருப்பங்களையும் வழங்குகிறார்கள்.

மேலும், நீங்கள் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் அல்லது வேறு எந்த சேவையையும் பயன்படுத்தாமல், ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், உங்கள் சிம் கார்டு 90 நாட்களுக்குப் பிறகு டீஆக்ட்டிவேட் செய்யப்படும். தொலைத்தொடர்பு ஆபரேட்டர் அந்த எண்ணை ரெஜிஸ்டர் செய்து, மற்றொரு யூசருக்கு வழங்கலாம். இருப்பினும், இப்போது நீங்கள் இந்த சூழ்நிலையைத் தவிர்க்கலாம்.

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் விதியை TRAI தற்போது அமல்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி, ரீசார்ஜ் முடிந்த அடுத்த 90 நாட்களுக்கு சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும். இந்த 90 நாட்கள் முடியும்போது, சிம் கார்டில் ரூ.20க்கான பிரீபெய்டு திட்டம் இருந்தால், அது பயன்படுத்தப்பட்டு, அடுத்த 30 நாட்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ்வாக இருக்கும்.

அதன்பின்னர், அடுத்த 30 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.20 கழிக்கப்படும் மற்றும் செல்லுபடியாகும். உங்கள் கணக்கில் பணம் இருக்கும்வரை இந்த செயல்முறை தொடரும். அதாவது வெறும் ரூ.20 செலவில் உங்கள் சிம் கார்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க முடியும். உங்கள் சிம் கார்டை உங்கள் பெயரில் நிலைத்திருக்க வேண்டும் என விரும்பினால், மாதம் மாதம் இதே போலவே செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை மட்டுமே வழங்கும் 2 புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ள ஏர்டெல்…!

ஒரு சிம்-ஐ ஆக்டிவாக வைத்திருக்க மாதத்திற்கு ரூ.20 செலவு செய்வது அதிகம் இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால், இது கூடுதல் பணம் சம்பாதிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மற்றொரு வழியாகும். எனவே, உங்களிடம் சிம் கார்டு இருந்தால், அதை ஆக்டிவ்வாக வைத்திருக்க விரும்பினால், ரூ.20 க்கு ரீசார்ஜ் செய்யலாம். இப்படி செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அழைப்பு, டேட்டா அல்லது எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது. சிம் கார்டை செயலில் வைத்திருக்க மட்டுமே இந்த ரீசார்ஜ் செய்ய முடியும்.



Source link