ஆனால் உங்களது ஃபோனில் உள்ள கியூ ஆர் கோடை நீங்களே ஸ்கேன் செய்ய வேண்டிய சூழல் வந்தால் என்ன செய்வது என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? பொதுவாக இது போன்ற நிலைமைகளில் வேறொரு டிவைஸை பயன்படுத்தி நமது போனில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்வோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். எவ்வாறு நமது போனில் உள்ள கியூஆர் கோடை நம்முடைய போனை பயன்படுத்தியே ஸ்கேன் செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் லென்ஸ்:

1. ஸ்கேன் செய்ய வேண்டிய கியூஆர் கோடை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளவும்.

2. இப்போது கூகுள் ஃபோட்டோஸ் செயலியை ஓபன் செய்து ஸ்கிரீன்ஷாட் தேடி அதனை ஓபன் செய்து கொள்ளவும்.

3. அதில் தோன்றும் பூதக்கண்ணாடி போன்ற ஐகானை தேர்வு செய்யவும்.

4. இப்போது உங்களது போனில் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டுவிடும்.

5. மற்ற முறைகளை விட இது மிகவும் எளிமையானதாகவும் வேகமானதாகவும் இருப்பது தான் இதன் கூடுதல் சிறப்பாகும்.

உங்கள் மொபைலின் பில்ட்-இன் ஸ்கேனர்:

1. தற்போது வெளிவரும் லேட்டஸ்ட் மாடல் மொபைல்களில் டிஃபால்ட் ஆகவே ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2. முன்னர் செய்ததைப் போலவே ஸ்கேன் செய்ய வேண்டிய கியூஆர் கோடை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ளவும்.

3. கியூஆர் மோடிற்கு ஸ்விட்ச் செய்துகொண்டு ஸ்கிரீன்ஷாட் எடுத்த இமேஜை செலக்ட் செய்யவும்.

4. ஐபோன் யூசர்கள் உங்களுடைய போட்டோஸ் ஆப்பிற்கு இன்று லைவ் டெக்ஸ்ட் ஆப்ஷன் ஆனில் இருந்தால் கியூஆர் கோடை டேப் செய்தாலே ஸ்கேன் செய்யலாம்.

5. ஆண்டராய்டு யூசர்கள் உங்களது கேலரி ஆப்பிற்கு சென்று ஸ்கேன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இது ஒவ்வொரு போன் மாடலுக்கும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் தரப்பு கியூ ஆர் கோடு ஸ்கேனர் செயலிகள்:

மேலே கூறியுள்ளதை தவிர கியூஆர் கோடு ஸ்கேன் செய்ய உதவும் மூன்றாம் தரப்பு செயலிகள் பலவும் சந்தையில் தற்போது கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி உங்கள் கேலரியில் உள்ள கியூஆர் கோடை நீங்கள் ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

1. உங்களுடைய ஆப் ஸ்டோரில் இருந்து நம்பகத்தன்மை வாய்ந்த கியூஆர் கோட் ஸ்கேனர் ஆப் ஏதேனும் ஒன்றை தரவிறக்கம் செய்யவும்.

2. இப்போது அந்த செயலியை ஓபன் செய்து ஸ்கேன் ஃப்ரம் கேலரி அல்லது இம்போர்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்

3. அதில் நீங்கள் ஸ்கிரீன்ஷாட் செய்த கியூஆர் கோடை செலக்ட் செய்து ஸ்கேன் செய்து கொள்ளலாம்

4. மூன்றாம் தரப்பு செயலிகளை தரவிறக்கம் செய்யும்போது நல்ல ரிவ்யூ மற்றும் ரேட்டிங் உடைய செயலிகளை தேர்வு செய்யவும்.

ஆன்லைன் கியூ ஆர் கோடு ஸ்கேனர்கள்:

செயலிகளை தரவிறக்கம் செய்வதற்கு பதிலாக ஆன்லைனிலேயே சில வலைத்தளங்கள் மூலம் நீங்கள் ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

1. ஸ்கேன் செய்ய வேண்டிய கியூஆர் கோடை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளவும்.

2. ஆன்லைனில் சென்று “ஆன்லைன் கியூஆர் கோட் டீகோடர்” (Online QR Code Decoder) என்று டைப் செய்து சர்ச் கொடுக்கவும்.

3. வலைத்தளத்தில் கூறியுள்ளபடி உங்களது ஸ்கிரீன்ஷாட் செய்த கியூஆர் கோடை ஸ்கேன் அப்லோட் செய்யவும்.

4. உங்களது க்யூர் கூட ஸ்கேன் செய்யப்பட்டு அதற்குரிய தரவுகள் திரையில் காண்பிக்கப்படும்.

5. இந்த வழிமுறை பின்பற்றுவதன் மூலம் ஃபோனில் மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்யாமலேயே வேண்டிய நேரத்தில் நீங்கள் ஆன்லைன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து கொள்ளலாம்.



Source link