உங்களிடம் இன்னும் ரூ.2,000 நோட்டுகள் உள்ளதா? நீங்கள் அவற்றைப் பரிமாறிக் கொள்ள நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருக்கும் குடிமக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய செயல்முறை பற்றிய தகவலை அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான பல விருப்பங்களை ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, எந்தவொரு ரிசர்வ் வங்கியின் கிளையிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதை தவிர, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் நோட்டு பரிமாற்ற சேவையையும் நீங்கள் பெறலாம்.

விளம்பரம்

Also Read: 
Gold Rate | தங்கம் விலை ரூ.7000-க்கும் குறைவாக சரசரவென சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?

இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட 19 ரிசர்வ் வங்கி வழங்கும் அலுவலகங்களில் ஒன்றிற்கு தபால் அலுவலகம் இவற்றை அனுப்பும்.

டெபாசிட் செய்த பிறகு, மாற்றப்பட்ட தொகையை ஆர்பிஐ நேரடியாக இந்தியாவில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்.

ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் ரூ.2,000 நோட்டுகளை நாடு முழுவதிலும் உள்ள தபால் அலுவலகம் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த ஏற்பாடு அக்டோபர் 9, 2023 முதல் அமலுக்கு வந்தது. குறிப்பாக ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகில் இல்லாதவர்களுக்கும், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் எளிமையான செயல்முறையை முடிக்க விரும்புபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும், RBI படிப்படியாக ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றாலும், ரூ.2,000 நோட்டுகள் நாடு முழுவதும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும்.

Also Read: 
2025-ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயருமா? எத்தனை சதவிகிதம் உயர வாய்ப்புள்ளது? – நிபுணர்கள் கணிப்பு என்ன?

ரூ.2000 நோட்டுகளை மாற்ற இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

1. முதலில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று, பிரன்ட் பேஜில் உள்ள “ஃபார்ம்ஸ் -அதர்ஸ்” பகுதியைப் பார்க்கவும். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து நிரப்பவும்.

விளம்பரம்

2. இதற்குப் பிறகு, விண்ணப்பப் படிவத்துடன், அதிகாரப்பூர்வமாகத் தேவையான ஆவணங்களின் புகைப்பட காப்பியையும் தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், NREGA கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அரசுத் துறை அல்லது பொதுத் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

Also Read: 
ரிசர்வ் வங்கி ஆளுநர் உடல் நலம் எப்படி இருக்கிறது..? அப்போலோ அறிக்கை வெளியீடு..!

3. உங்கள் ஆவணங்கள் தயாரானதும், அவற்றை உங்களின் ரூ.2,000 நோட்டுகளுடன் நாடு முழுவதிலும் உள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள். அஞ்சல் அலுவலகம் நீங்கள் சமர்ப்பித்த ஆவணத்தை ஆர்பிஐயின் 19 நியமிக்கப்பட்ட அலுவலகங்களில் ஒன்றிற்கு அனுப்பும்.

4. ரிசர்வ் வங்கி உங்கள் ஆவணங்களை சரிபார்த்து இந்தத் தொகையை நேரடியாக இந்தியாவில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்.

விளம்பரம்

.



Source link