Last Updated:

இந்த லிங்குகளை கிளிக் செய்தவுடன் மோசடிக்காரர்கள் அவர்களுடைய தனிநபர் மற்றும் பொருளாதார விவரங்களை திருடுகின்றனர்.

News18

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்களை வைத்து தற்போது ஒரு புதிய மோசடி நடைபெற்று வருகிறது. இதில் குறி வைக்கப்பட்டுள்ள நபர்கள் தங்களுடைய PAN கார்டு விவரங்களை அப்டேட் செய்யும்படி கேட்கப்படுகின்றனர். இதை செய்யாவிட்டால் அவர்களுடைய அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும் என்று மோசடி மெசேஜ் அனுப்பப்படுகிறது. இந்த ஏமாற்று மெசேஜ்கள் பொதுவாக சந்தேகத்திற்குரிய லிங்குகளை கொண்டுள்ளது. இந்த லிங்குகளை கிளிக் செய்தவுடன் மோசடிக்காரர்கள் அவர்களுடைய தனிநபர் மற்றும் பொருளாதார விவரங்களை திருடுகின்றனர். எனவே இந்த மாதிரியான மெசேஜ்கள் போலியானவை என்பதை தெளிவுப்படுத்துவதற்காக பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரியா (PIB) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, “PAN கார்டை 24 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யாவிட்டால் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும். இந்த மெசேஜ் போலியானது” என்பதை X தளத்தில் PIB வெளியிட்டுள்ளது. இந்தியா போஸ்ட் ஒருபோதும் இந்த மாதிரியான மெசேஜ்களை அனுப்பாது என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, எந்த விதமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்படுகிறது?:

பிஷிங் என்பது ஒரு ஆன்லைன் மோசடி. இதில் சைபர் கிரிமினல்கள் நம்பகமான நிறுவனங்களைப் போல வேடமிட்டு தனிநபர்களின் பாஸ்வார்டுகள், அக்கவுண்ட் நம்பர்கள் அல்லது பின் நம்பர்களை திருடுகின்றனர். இந்த சூழ்நிலையில் பொதுவாக மோசடிக்காரர்கள் குறிவைக்கப்பட்ட நபர்களை பயத்திற்கு ஆளாக்கி, PAN கார்டு விவரங்களை அப்டேட் செய்யாவிட்டால் அவர்களுடைய அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும் என்ற மெசேஜ்களை அனுப்புகின்றனர். இந்த மெசேஜ்கள் மிகவும் உண்மையான மெசேஜை போலவே தோன்றும்.

பிஷிங் மோசடிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் தங்களுடைய கஸ்டமர்களை பாதுகாப்பதற்கு ஒரு சில முக்கியமான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபர்கள் தங்களுடைய பாஸ்வேர்டுகளை வழக்கமான முறையில் அப்டேட் செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது என்றும், போலியான கஸ்டமர் கேர் நம்பர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் தங்களுடைய பேங்க் அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை வழக்கமான முறையில் கண்காணிப்பதன் மூலமாக ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக கண்டுபிடித்து விடலாம் என்று கூறப்படுகிறது. கூடுதலாக பப்ளிக் Wi-Fi பயன்படுத்தும் பொழுது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நிதி நிறுவனங்களிடம் இருந்து வரும் எந்த ஒரு தகவலையும் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளாமல் நம்பக்கூடாது.

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பேங்கிங் பெரிய அளவில் வளர்ந்து வரும் சூழ்நிலையில் மோசடிக்காரர்கள் யூசர்களை ஏமாற்றுவதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். ஆகவே பாதுகாப்பாக இருந்து நடக்கக்கூடிய மோசடிகள் பற்றி தெரிந்து கொண்டு, ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் உங்களுடைய தனிநபர் அல்லது வங்கி விவரங்களை பாதுகாப்பற்ற பிளாட்ஃபார்ம்கள் மூலமாக பகிர வேண்டாம். இந்த எளிமையான விஷயங்களை பின்பற்றி மோசடிக்காரர்களின் வலைக்குள் மாட்டாமல் கடுமையாக உழைத்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்டாக செயல்பட்டு, பாதுகாப்பாக இருங்கள்.



Source link