கடனைப் பெறுவதற்கு முன் கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள், வட்டிக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முழுமையாக சரிபார்ப்பது முக்கியம்.

டிஜிட்டல் கடன்கள் விரைவாக வழங்கப்பட்டு வருவதால், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் வசதியாகிவிட்டது. இதன்மூலம் நீங்கள் பல கடன் சலுகைகளை எளிதாக ஒப்பிட்டு, அவசர அல்லது முக்கிய தேவைகளை சமாளிக்க உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து மிகவும் எளிதாகவும், விரைவாகவும் தேவையான தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, தவறான கடன் வலையில் சிக்காமல் இருக்க எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. எனவே, கடனைப் பெறுவதற்கு முன் கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள், வட்டிக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முழுமையாக சரிபார்ப்பது முக்கியம். கடனை முடித்தபிறகு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதும், பாதுகாப்பதும் எதிர்காலத்திற்கு அவசியமானது.

விளம்பரம்

அனைத்து மாதாந்திர தவணைகளையும் (இஎம்ஐ) செலுத்திய பிறகு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஆனால் கடனை மூடுவதன் மூலம் அனைத்தும் முடிந்துவிடாது. எனவே, உங்கள் தனிநபர் கடன் கணக்கை மூடும்போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு விரிவாக பார்ப்போம்.

தனிநபர் கடனை முடித்த பிறகு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

NOC பெறவும்: தடையில்லா சான்றிதழ் அல்லது NOC, உங்கள் தனிப்பட்ட கடனை வெற்றிகரமாக செலுத்திவிட்டீர்கள் என்பதற்கான சான்றான NOC-ஐ வாங்குவது முக்கியமான படியாகும். மேலும், கடனளிப்பவருக்கு இனி நீங்கள் எந்த நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்பதற்கான சான்றும்தான் இது. NOCஐப் பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது எதிர்காலத்தில் வரக்கூடிய தேவையில்லாத பிரச்சனைகளை தீர்க்க உதவும். அசல் NOC அல்லது அதன் நகலை எளிதாக எடுக்கும்படி உங்கள் கணினியில் சேமித்து வைத்திருப்பது நல்லது. எதிர்காலத்தில் புதிய கடன்களைப் பெறவும் இந்த ஆவணம் உதவும்.

விளம்பரம்

கடன் கணக்கு அறிக்கை: உங்கள் தனிப்பட்ட கடனை முடித்த பிறகு வங்கிகள் தாமாகவே கணக்கு அறிக்கையை வழங்கலாம். அனைத்து சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணைகளும் (EMIகள்) உடனடியாகத் தீர்க்கப்பட்டதா என்பதை இது சரிபார்க்க உதவுகிறது. கிரெடிட் பீரோக்களுடன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த கணக்கு அறிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் கடன் வாங்கும்போது கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடன் கணக்குகளின் தனி அறிக்கையைப் பெற முடியுமா என்பதை விசாரித்து அதை பெற முயற்சி செய்வது நல்லது.

விளம்பரம்

இறுதி EMI கணக்கீடு மற்றும் கட்டணம்: கடன் வாங்கியவர் பணம் செலுத்திய பின்னர், அந்த பணம் முழுமையாக வரவு வைக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய, இறுதி EMI கணக்கீட்டை கவனமாக ஆராய வேண்டும். ‘பே லேட்டர்’ அல்லது காசோலை மூலம் பணம் செலுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் க்ளியரன்ஸ் நேரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அபராதங்களைத் தடுக்க துல்லியமான வட்டி கணக்கீடுகளை உறுதி செய்ய வேண்டும். தனிநபர் கடனை முடிக்கும்போது எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த விவரங்களின் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

விளம்பரம்

இதையும் படிக்க:
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா திட்டம்…

அனைத்து அசல் ஆவணங்களையும் திரும்பப்பெறவும்: கடனுக்காக விண்ணப்பிக்கும்போது உங்கள் கடனாளியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் திரும்பப் பெறுவதே கடனை மூடும் செயல்முறையின் முக்கியமான பகுதியாகும். கடனளிப்பவரால் தக்கவைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்லது அத்தகைய பட்டியலை நீங்களே பராமரித்திருக்கலாம். எனவே, ஆவணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். நீங்கள் கடனைப் பெற்ற வங்கி அல்லது கடன் வழங்குநரிடமிருந்து ஆவணங்களை தனிப்பட்ட முறையில் திரும்பப் பெறுவது நல்லது.

விளம்பரம்

பயன்படுத்தப்படாத போஸ்ட்-டேட் காசோலைகளைத் திரும்பப் பெறவும்: நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, ​​பாதுகாப்பு நடவடிக்கையாக சில பிந்தைய தேதியிட்ட காசோலைகளை வழங்குமாறு கடன் வழங்குபவர் உங்களிடம் கேட்டிருக்கலாம். இந்த காசோலைகள் கடன் வழங்குபவரை நிதி மோசடி அல்லது EMI கட்டப்படாதபோது பாதுகாக்கின்றன. எனவே, உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் நீங்கள் செலுத்திய பிறகு, அந்த காசோலைகளை கடனளிப்பவரிடம் இருந்து திரும்பப் பெறுவது அவசியம்.

உங்கள் கிரெடிட் அறிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்: உங்களது ஒவ்வொரு கடனையும் முடித்த பிறகு உங்கள் கிரெடிட் அறிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கடன் வழங்குபவர்கள் கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களுக்கு கடன் மூடப்பட்டதை தவறாமல் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
உங்க கிட்ட NPS அக்கவுன்ட் இருக்கா… இனி பேமென்ட்ட ஈஸியா PhonePe மூலமாகவே பண்ணலாம்!!!

எனவே, ஏற்கனவே உள்ள ஒவ்வொரு கடனையும் செலுத்துவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மேம்படுத்தப்பட வேண்டும். உங்கள் கிரெடிட் அறிக்கையில் கடனை முடித்தது புதுப்பிக்கப்படவில்லை என்றால், அதை புதுப்பிக்கும்படி கிரெடிட் பீரோக்களுக்கும் நீங்கள் தெரிவிக்கலாம். தேவைப்பட்டால், இது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பலாம் மற்றும் கடன் நிறுவனத்தால் சரிபார்த்த பிறகு அது சரிசெய்யப்படும்.

.



Source link