38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை  உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் முன்னதாக உத்திரபிரதேச அணியின் கேப்டனாக புவனேஸ்வர் குமார் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான அணி சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது ரிங்கு சிங் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக உத்திரபிரதேச டி20 கிரிக்கெட் தொடரில் மீரட் மாவெரிக்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிங்கு சிங் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.  9 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 210 ரன்களை குவித்தார். ஸ்டிரைக் ரேட் 161.54. இந்த தொடரில் பினிஷர் ரோலில் மிகச் சிறப்பாக ரிங்கு சிங் செயல்பட்டார்.

விளம்பரம்

இந்நிலையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கியமான பினிஷர் ஆக ரிங்கு சிங் செயல்பட்டு வருகிறார். அவருடன் முக்கிய ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

அடுத்த சீசனில் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், புதிய கேப்டனை தேடி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

விளம்பரம்

இதையும் படிங்க – ஹேர் ஸ்டைலை மாற்றிய விராட் கோலி… லைக்ஸை குவிக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோ….

இந்த சூழலில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அஜிங்கியா ரஹானே அல்லது வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தையும், தலைமை பண்பையும் வெளிப்படுத்தினால் அந்த வாய்ப்பு ரிங்கு சிங்கிற்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது

விளம்பரம்

.



Source link