உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பச்சை அயடின் கலக்காத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சமையல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தீர்வாக, நடைமுறையில் உள்ள வரி விகிதத்தில், 30,000 மெட்ரிக் டன் பச்சை அயடின் கலக்காத உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



Source link