அம்பாறை, காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில், உழவு இயந்திரத்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று (01) நேரில் சென்று அனுதாபங்களை தெரிவித்தார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த 06 மத்ரஸா மாணவர்கள், சாரதி மற்றும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒரு நபர் உட்பட உயிர்நீத்த 08 பேர்களின் வீடுகளுக்கும் சென்று, குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ,முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

The post உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி. நேரில் சென்று அனுதாபம் appeared first on Thinakaran.



Source link