Last Updated:
டிசம்பர் 2024 இறுதிக்குள் உலகின் தலைசிறந்த 25 வங்கிகளின் சந்தை மூலதனம் ஆண்டு அடிப்படையில் 27.1 சதவீதம் அதிகரித்து 4.6 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. ஜேபி மோர்கன் சேஸ் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வங்கியாக உள்ளது.
இந்தியாவின் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை உலகின் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட முதல் 25 வங்கிகளில் இடம் பிடித்துள்ளன. அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா அறிவியில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் டேட்டாவின் அறிக்கையின்படி, உலகின் முதல் 25 மார்க்கெட் கேப் வங்கிகளில், எச்டிஎஃப்சி வங்கி 13வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 19வது இடத்திலும், எஸ்பிஐ 24வது இடத்திலும் உள்ளன. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் (அக்டோபர்-டிசம்பர்) முடிவில், HDFC வங்கியின் சந்தை மூலதனம் $ 158.5 பில்லியன், ICICI வங்கி $ 105.7 பில்லியன், SBI $ 82.9 பில்லியன் ஆக உள்ளது.
இந்திய வங்கிகளின் நிலை வலுவாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ஆண்டு அடிப்படையில் 25.8 சதவீதம் அதிகரித்து 105.7 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்த காலகட்டத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் ஆண்டு அடிப்படையில் 1.6 சதவீதம் அதிகரித்து 158.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அறிக்கையின்படி, டிசம்பர் 2024 இறுதிக்குள் உலகின் தலைசிறந்த 25 வங்கிகளின் சந்தை மூலதனம் ஆண்டு அடிப்படையில் 27.1 சதவீதம் அதிகரித்து 4.6 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. ஜேபி மோர்கன் சேஸ் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வங்கியாக உள்ளது.
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் முடிவில், அதன் சந்தை மூலதனம் ஆண்டு அடிப்படையில் 37.2 சதவீதம் அதிகரித்து 674.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த காலகட்டத்தில், கோல்ட்மேன் சாக்ஸின் சந்தை மூலதனம் 42.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அறிக்கையின்படி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்புகளால் நான்காவது காலாண்டில் பெரும்பாலான பங்குகள் உயர்ந்தன.
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டணங்களும் 2025 இல் திட்டமிடப்பட்ட வரிக் குறைப்புகளும் ஒன்றையொன்று சமநிலைப்படுத்தலாம் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
January 15, 2025 4:49 PM IST